செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் 101 ―31 .30 ―31 -30 ஆக 365 அல்லது 366 (கூடிய ஆண்டு) பிழை பாடுகளை நீக்கி கி.மு.46இல் ஜூலியன் காலண்டர் நடைமுறையில் வந்தது. பிசகைத் திருத்திப் புதுமுறை அமைப்பதற்காக கி.மு. 46இல் மாத்திரம் 445 நாட்கள் கொண்டதாக்கப் பட்டது. அதனால் கி.மு. 46 "குழப்பமான ஆண்டு" என்று பெயர் பெற்றது. பிழை செய்வதற்காகவே குருமார்கள் ஏற்பட்டனர் போலும்! ஏனென்றால், நான்கு வருஷத்திற்கு ஒருமுறை என்ப தைத் தவறாக அர்த்தம் செய்து மூன்று வருஷத்திற்கு ஒரு முறை, ஒரு நாள் அதிகப்படியாக சேர்த்தனர். இதனால் காலண்டர் சிறிது பிசகியது. ஜூலியன் காலண்டர்படி 4வது, 8வது, 12வது ஆண்டுகள் 366 நாட்கள் கொண்ட கூடிய ஆண்டுகள். 4வது ஆண்டு கூடிய ஆண்டு என்று அறிவித்தபின், குருமார்கள் தவறாக 4வது, 5வது, 6வது, 7வது என்று கணக்குப்போட்டு 7வது ஆண்டிலேயே 366 நாட்கள் உண்டாக் கினர். இந்தப் பிழை கி.மு. 8வரை நிகழ்ந்தது. அகஸ்டஸ் அதிகாரத்திலிருந்தபொழுது, பிழை கண்டு பிடிக்கப்பட்டது. குருமார்கள் ஜூலியன் காலண்டரைவிட 3நாட்கள் அதிகமாகக் கணக்கிட்டிருந்தனர். எனவே கி.மு.க்குப்பின் வந்த 12 ஆண்டுகள் சாதாரண ஆண்டுகளாக, 365 நாட்கள் கொண்டதாக எழுதப்பட்டன. காலண்டரில் தன் பெயரையும் நுழைத்து, சிறிது மாற்றம் செய்தான் அகஸ் டஸ். ஜூலியஸ் சீசர் பெயரால் வழங்கிய ஜூலை மாதத்திற்கு அடுத்த மாதத்தை ஆகஸ்ட் என்று பெயரிட்டான். ஜூலியன் காலண்டர் கணக்குப்படி ஜூலைக்கு அடுத்த மாதத்திற்கு 30 நாட்கள்தானிருந்தன. ஜூலியஸ் சீசருக்கு தான் எவ்விதத் திலும் குறைந்தவனல்ல என்பதற்காகப் பிப்ரவரியிலிருந்து ஒரு நாளை எடுத்து ஆகஸ்டில் சேர்த்து 31 நாட்களாக்கினான்.
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/103
Appearance