102 அதற்கடுத்த செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களை 30,31,30,31 நாட்களாக்கினான். தற்பொழு துள்ள காலண்டர் இந்த முறையிலேயே வழங்குகிறது. ஆண்டு ஒன்றுக்கு 365 நாள் என்று கணக்கிட்டுத்தான் ஜூலியன் காலண்டர் வகுக்கப்பட்டது. இது உண்மையான வருவு நேரத்தைவிட 11 நிமிடங்கள் கூடுதலானது.நூறு வருஷங்களில் முக்கால் நாள் அதிகமாகிவிடும். இந்தப் பிசகு 1577ல் கிரிகோரி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. அது வரை 11 நாட்கள் வித்தியாசம் வந்தது. இதை நீக்கப் போப் கிரிகோரி 1582 அக்டோபர் 4ஆந்தேதிக்கு மறுநாளை அக்டோ பர் 15ந் தேதி என்று வரையறுத்தார். பின் வழக்கம்போல் மாதங்களுக்கு நாட்கள் தொடர்ந்தன. நூறு வருஷத்தில் முக்கால் நாளென்றால் நானூறு வரு ஷத்தில் மூன்று நாட்கள் வித்தியாசம் வரும். இதைத் தடுக்க கிரிகோரி ஒரு வழி செய்தார். ஜூலியன் காலண்டர்படி ஒரு வரு ஷத்தின் எண்ணை 4ஆல் சரியாக வகுத்தால் அந்தஆண்டு கூடிய ஆண்டு (366 நாட்களைக் கொண்டது) அதன்படி 1600, 1700,1800,1900, 2000 இவையெல்லாம் கூடிய ஆண்டுக ளாகும். நூற்றாண்டுகளெல்லாம் நான்கால் சரியாக வகுக் கப்படுமாதலால், அவையெல்லாம் கூடிய ஆண்டுகளாகும். கிரிகோரி அதை மாற்றி நூற்றாண்டுகளை 400ஆல் சரியாக வகுத்தால் மட்டுமே அவை கூடிய ஆண்டு என ஏற்படுத்தி னார். அதன்படி 1600, 2000 மாத்திரமே கூடிய ஆண்டு களாகும். 1700, 1800, 1900 சாதாரண ஆண்டுகளே. இதனால் 400 ஆண்டுகளில் 3 நாட்கள் விடப்படுகின்றன. . இந்தத் திட்டத்தை ஸ்பெயின், போர்ச்சுகல் உடனே ஒப்புக் கொண்டன. பிரான்சு, டச்சு, ஹாலந்து நாடுகளும் பழக்கத் திற்குக் கொண்டுவந்தன. இங்கிலாந்து, ருஷியா நாடுகள் ஒப்புக்கொள்ளவில்லை. . கிரிகோரி திட்டத்தை ஒப்புக்கொள்ள 1585இல் இங்கி லாந்து பார்லிமெண்டில் சட்டம் கொண்டுவந்தார்கள்.
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/104
Appearance