103 எதிர்ப்பு வந்தபடியால் பிரபுக்கள் சபையில் சட்டம் கைவிடப் பட்டது. மறுபடியும் 1751இல் பார்லிமெண்ட் சட்டம் இயற்றி யது. இங்கிலாந்தில் அதுவரை மார்ச் 25ஆம் தேதிதான் ஆண்டின் தொடக்க நாள். அது ஜனவரி முதல் தேதிக்கு மாற்றப்பட்டது. கிரிகோரி திட்டப்படி 11 நாட்கள் கழிக்கப் பட்டு 1752 செப்டம்பர் 2ந் தேதிக்கு மறுநாள் செப்டம்பர் 14 என்று ஆக்கப்பட்டது. 1752 இது சாதாரணத் திருத்தமாக நமக்குப் பட்டபோதிலும், மாறுதல் விரும்பாத ஆட்சி மக்களுக்கு இந்தச் சட்டம் ஆத்தி ரத்தைக் கொடுத்தது. எல்லோரும் ஆட்சேபித்தனர். கண்ட னக் குரல்களும், எதிர்ப்புக் கோஷங்களும் மந்திரி சபையைத் தாக்கின. "கடவுள் கொடுத்த நாட்களைத் திருடும் கயவர் களை” எல்லோரும் கண்டித்தனர். நாடெங்கும் கலகங்கள். பிரிஸ்டல் நகரில் மூண்ட கலகம் இரத்தக்களரியில் முடிந்தது. வீதியில் பிணங்கள் விழுந்தன. மறு தேர்தல் வந்தபொழுது, "எங்களுடைய 11 நாட்களைத் திருப்பித்தா" என்ற தேர்தல் பிரசாரம் வலுத்து, ஆர்ப்பாட்டங்களும் ஆவேசப்பேச்சுக்களும் எழுந்தன. காலண்டரைத் திருத்தியமைக்கக் காரணமாயிருந்த வர்கள் வீட்டின்முன் மக்கள்கூடிப் பழி தூற்றினர். சிறிய திருத்த மாயிருந்தால் கூட, அது மக்களிடம் எவ்வளவு கொதிப்பை உண்டாக்குகிறது என்பதும், அதைக் கொண்டுவரப் பாடுபடுப் வர்கள் மக்களால் எவ்வளவு பழிதூற்றப்படுகின்றனர் என்ப தும், இந்தச் சிறு உதாரணத்தால் விளங்கும். சட்டம் நிறை வேற்றுவதற்குக் காரணமாயிருந்தவர்களில் பிராட்லி என்ற கனித அறிஞரும் ஒருவர். அவர் நீண்ட காலம் நோய்வாய்ப் பட்டு இறந்தார். "பழைய காலண்டரில் பதினொரு நாட் களை அழித்த காரணத்தால், ஆண்டவனாகப் பார்த்து தீராத நோய் கொடுத்து தண்டித்தார்" என்று ஊர் மக்கள் பேசிக்கொண்டனர். பிரஞ்சுப் புரட்சிக்குப்பின் காலண்டரை மாற்றியமைக்கப் பிரஞ்சு அசெம்பிளி விரும்பியது. புரட்சி ஆரம்பமான 22-9-1792லிருந்து வருடங்களைக் கணக்கிட முடிவு செய்த
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/105
Appearance