உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 னர். 30 நாட்களைக் கொண்ட 12 மாதங்களும், எந்த மாதத்திலும் சேராத 5 நாட்களும் கொண்டது ஒரு ஆண்டு. தனித்து நிற்கும் ஐந்து நாட்களும் முறையே நற்குணம், அறிவு, உழைப்பு, உருத்து, பலன் இவைகளின் அறிகுறியாகப் பெயரிடப் பட்டன. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிற அதிகமான ஒரு நாள் புரட்சி நாள் என்று அழைக்கப்பட்டது. மாதங் களின் பழையபெயர்கள் மாற்றப்பட்டு, பின்வருபவைகளைக் குறிக்கும் பெயர்கள் இடப்பட்டன. திராட்சை, கடுங்காற்று மழைக்காற்று, பனி, மழை, பருவக்காற்று,மொக்கு, மலர், புல்வெளி, அறுவடை, வெப்பம்,கனி. பிரெஞ்சுப் புரட்சி அசெம்பெளியில் செய்யப்பட்ட இந்த முறை நெடுநாளைக்கு நீடிக்கவில்லை. நெப்போலியன் ஆட் சிக்கு வந்தபொழுது பழையமுறை மீண்டும் அமுலுக்கு வந்தது. கிரிகோரி காலண்டர் திருத்தம் பிறநாட்டில் வழங்கும் தேதிக்கும் ருஷ்யாவில் வழங்கும் தேதிக்கும் 13 நாட்கள் வித்தியாசமிருந்தது. ருஷியப் புரட்சிக்குப்பின் 1919இல் காலண்டர் திருத்தியமைக்கப்பட்டது. அதனால்தான் ருஷிய நாட்டுப் பழைய காலண்டர் தேதிப்படி அக்டோபர் 25இல் தோன்றிய புரட்சியை நவம்பர் 7ல் கொண்டாடுகிறோம். அக்டோபர் புரட்சி என்ற பிரசித்திபெற்ற ருஷிய புரட்சி நவம்பர் மாதத்தில் கொண்டாடப்படுவது பலருக்கு ஆச்சரியத் தையே கொடுக்கும். துருக்கியில் 1926இல் கிரிகோரி திருத்தத்துடன் கூடிய ஜூலியன் காலண்டர் முறை அமுலுக்கு வந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளாக வளர்ந்துள்ள காலண்ட ரின் வரலாறு இது. அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் முற் றிலும் வழங்குவது மேலே விளக்கப்பட்ட காலண்டர் முறையே. மேலை நாடுகளுடன் தொடர்புடைய மற்றநாடுகளிலும் அது பரவியுள்ளது. ஆனால், உலகம் முழுவதும் சாதாரண மக்கள் அனைவரின் பழக்கத்திற்கும் வருமளவுக்கு இன்னும் பரவ வில்லை. இருண்ட ஆப்பிரிக்காவிலும், அமேசான் நதி தீரத்தி