உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 லும், திபேத் பீடபூமியிலும், மயோரி வகுப்பினரிடையேயும், பழைய காலக் கணக்குகளே காணப்படுகின்றன. இன்றும் தமிழ் நாட்டில் சிற்றூர்களில் தமிழ் மாதத் தேதிகளே வழக்கில் இருக்கின்றன. காரணம், புதுமுறை என்ற காரணத்தால் வழக்கிற்கு வராதது மட்டுமல்ல, பழைய முறை சரியாகக் கணிக்கப்பட்டிருந்ததால் புதுமுறையின் அவசியம் அவர்களுக் குப் படவில்லை. பல பிசகுகள், திருத்தங்கள், இவைகளுக்குப்பின் காலண் டர் நம் கைக்கு வந்துள்ளது. மாறுதல்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டன என்று என்று கூறமுடியாது. ஒரு நூற்றாண்டில் சரியானது என்று கருதப்பட்ட பல கருத்துக்களும் அமைப்பு களும் மறுநூற்றாண்டில் மாற்றப்படுகின்றன. காலத்தைச் சரியாகக் காட்டியபோதிலும், காலண்டரின் அமைப்பு முறை திருப்திகரமானதல்ல என்று அறிஞர் அண்ணா கருதுகின்ற னர். எனவே, மீண்டுமோர் மாற்றம் தேவை என்று கூறுகின்ற னர். எனவே, மீண்டும் அவர்கள் காட்டுகிற அமைப்புமுறை அமுலுக்கு வர எவ்வளவு காலம் பிடிக்கும் என்று கூறமுடியாது. நலம் பயக்கத்தக்க மாறுதல் வந்தால் அதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். முதலில் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் காலப்போக்கில் மாறுதல் வந்துதான் தீரும். . 21.17