13. உலகின் கடின மொழி துருவப் பகுதிகளில் பனிக்காட்டில் வசிக்கும் எஸ்கிமோக் கள் வாழ்க்கை மிகவும் விசித்திரமானது. கடினமான உழைப் புடன் மனந்தளராது மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். அவர் கள் வீடும் குடியிருப்பும் செங்கல், சுண்ணாம்பு, சிமிண்டு இவற்றால் ஆனவையல்ல. பனிக்கட்டியாலானவை. உறைந்த பனிப்பாறைகளில் சிறுசிறு கூட்டமாகச் சென்று சீல் முதலிய பிராணிகளை வேட்டையாடி வயிறு வளர்க்கின்றனர். இவர் கள் வாழ்க்கைமுறையில் நமக்குப் புரியாத புதிராத இருப் பது இவர்கள் பேசும் மொழியே. எவருக்கும் புரியாத இவர்களின் மொழி, இவர்களுடன் முதன்முதலில் வாணிபத்தின் பொருட்டுத் தொடர்புகொள்ள விரும்பிய மக்களுக்கு பெரிய சிக்கலைத் தந்தது. எஸ்கிமோக் களின் மொழி கடினமாயிருந்ததால், கதம்பக் கூட்டு மொழி யைக் கண்டுபிடித்து வாணிபம் செய்தனர். இக் கதம்பக்கூட்டு மொழியில் ஆங்கிலம், இந்திய மொழிகள், பிரெஞ்சு நார்ஸ் ஹவாய் முதலிய மொழிச்சொற்கள் கலந்திருக்கின்றன. இப் பனிப்பகுதிகளுக்குப் புதிதாக வரும் பார்வையாளர்கள், இம் மொழியையே எஸ்கிமோக்களின் சொந்த மொழி தவறாக எண்ணுகின்றனர். என்று உலகின் ஏனைய பகுதிகளிலிருந்து விலகியிருக்கும் இந் தப் பகுதிகளில் வழங்கும் மொழியும், ஏனைய மொழியினின் றும் முற்றிலும் வேறுபட்டும் விலகியும் இருக்கின்றது. உல கில் பெரும்பகுதி உதிரியாக வாழும் மக்களில் முதன்மை
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/108
Appearance