107 யானவர்கள் எஸ்கிமோக்கள்தான். ஆனால், இவர்களின் மொழி மட்டும் ஸைபீரீயாவிலிருந்து கிரீன்லாந்துவரை ஒரே மொழியாகவே இருக்கின்றது. ஒரு பெரும் சொற்றொடரில் உணர்த்தக்கூடிய கருத்தை, ஒரு சொல்லில் உணர்த்தமுடி கிறது. இம்மொழியில், சமீபகாலம்வரை எழுத்துவடிவம் அச்சு வடிவம் இல்லாமல் இருந்தது. சிறிது சிறிதாக ஆவ லால் தூண்டப்பட்டு இப்பகுதிக்கு வரும் பார்வையாளர்கள் உற்சாகத்துடனும், விடாமுயற்சியுடனும் கற்று, இக் கடின மொழியைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தனர். இவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் அமெரிக்கா, கானடா முதலிய நாடுகளில் இருந்துவந்த சமயப்பணியாளர்களும், அரசாங்க அலுவலர்களும் ஆவர். ஒலி எழுத்துக்களாக மொழிபெயர்க்கப் பட்டு, எழுத்துக்கள் பெரும் வார்த்தைகள் கொண்ட சொற் றொடர்களாக ஆக்கப்படுகின்றன. தற்பொழுது எஸ்கிமோக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்கின்றன. சில வானொலி நிலையங்களில்கூட எஸ்கிமோ மொழியில் நிகழ்ச்சிகள் நடை பெறுகின்றன.
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/109
Appearance