1. அரும்பெரும் தமிழர் போற்றிய அழகுக் கலைகள் அழகுமிளிர் கலைகள் அரும்பெருந்தமிழர், ஆற்றல்மிகு தமிழால் வளர்த்த பல, இன்றும் தமிழகத்தில் ஈடும் எடுப்புமற்றுத் திகழ்ந்து வருகின்றன. உலகில் எத்துணையோ நாகரிகங்கள் தோன்றி, வளர்ந்து, பல மறைந்தும், சில சிதைந்தும், சில இருந்தும் வருகின்றன என்றும், அவற்றில் குறிப்பிடத்தக்க நாகரிகங்கள் இருபத்து மூன்று என்றும், அவற்றிலும் மிகச்சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவை தமிழர் நாகரிகம், ஆரியர் நாகரிகம், சுமேரியர் நாகரிகம், அராபியர் நாகரிகம், எபிரேனியர் நாகரிகம், எழுபதியர் நாகரிகம், கிரேக்கர் நாகரிகம், உரோமானியர் நாகரிகம் ஆகியவை என்றும் ஆராய்ச்சி வல்லுநர் கூறுவர். கடல்கொண்ட குமரிக்கண்டத்தில் தோன்றிய தமிழர் நாகரிகந்தான், தென்னாட்டின் திராவிட நாகரிகமாக மலர்ந்து சிந்துவெளி நாகரிகமாக (ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகமாக) மிளிர்ந்து, பின்னர் சுமேரியர் நாகரிகமாக மாறி, அடுத்து அராபியர் நாகரிகமாக ஆகி, பின்னர் எபிரேனியர் நாகரிகமாகத் தோன்றி, அடுத்து எகுபதியர் நாகரிகமாக உருப்பெற்று, பின்னர் கிரேக்கர் நாகரிகமாகத் திகழ்ந்து, பின்னர் ஐரோப்பாக் கண்டத்தின் நாகரிகமாகக் காட்சியளிக்கத் தொடங்கியது என்று இந்தியாவிலே
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/11
Appearance