14. குடவோலை கண்ட குடியாட்சி ஒவ்வொரு ஊரிலும், இந்த நாட்களில், ஊர் மக்களுக் கான பணிகளை ஆற்றுவதற்கு ஊராட்சி மன்றம் இருப்பதைப் போல, பண்டைத் தமிழகத்தில், ஒவ்வொரு ஊரிலும் 'ஊர்ச் சபை' என்னும் ‘ஊர் அவை இருந்து பனியாற்றி வந்திருக் கின்றது. ஊர் அவையில் இடம் பெறுவோர், இப்போதைப் போலவே ஊர்மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஊர்கள் இப்பொழுது பல 'வார்டுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வார்டிலிருந்தும் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப் படுவதைப்போலவே, ஒவ்வொரு ஊரும் பல குடும்புகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குடும்பிலிருந்தும் பிரதிநிதிகள் தேர்ந் தெடுக்கப்பட்டார்கள். செங்கற்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த உத்திரமேரூர் என்னும் ஊர் முப்பது குடும்புகளாகப் பிரிக்கப் பட்டிருந்தது என்றும், தஞ்சை மாவட்டத்தில் செந்தலை என்று இன்று வழங்கப்பெறும் சந்திரலேகைச் சதுர்வேதி மங்கம் என்னும் ஊர் அறுபது குடும்புகளாகப் பிரிக்கப்பட்டி ருந்தது என்றும், கல்வெட்டுச் செய்திகளிலிருந்து அறியப் படுகின்றன. இப்பொழுது தேர்தல் சாவடியில்’ வாக்காளர்கள் சென்றிருந்து வாக்குகளைப் பதிவு செய்வதுபோல, இப் பொழுது ஊர்ச்சான்றோர் கூடுவதற்காக ஊர் நடுவே அமைக்கப்பெறும் 'பொதுயில்லில் ஊர்மக்கள் கூடியிருந்து வாக்குகளைப் பதிவு செய்தனர். இப்பொழுது வாக்குச்சீட்டு .
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/110
Appearance