109 'பாலட் பேப்பர் (Ballat paper) என்று அழைக்கப்படுவது போல, அப்பொழுது வாக்குச்சீட்டு 'குடவோலை' என்று கூறப்பட்டது. வாக்குச் சீட்டுகளைப் போடுவதற்கு இப்பொழுது 'பாலட் பாக்ஸ்'(Ballat Box) பயன்படுத்தப்படு வதைப்போல, அப்பொழுது குடம்' (மட்குடம்) பயன்படுத்தப் பட்டது. இப்பொழுது, அதிகமான எண்ணிக்கையுள்ள வாக்குச் சீட்டுகளைப் பெறுபவரே பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப் படுவார் என்ற முறை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் பண்டைத் தமிழகத்தில், தேர்தலுக்குப் போட்டியிடுபவர்களின் பெயர்கள் தனித்தனி ஓலைகளில் (பனையோலைகள்) குறிக்கப் பட்டு, அவை குடத்தில் இடப்பட்டு, அவை குலுக்கப்பெற்று, அவற்றிலிருந்து பொறுக்கி யெடுக்கப்படும் சீட்டில் உள்ள பெயருக்குரியவரே பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். ஊர்களில் ஊரவையினர் இருந்து ஊர்ப்பணிகளைக் கண் காணித்து வந்ததைப் போலவே, பூம்புகார், உறையூர், காஞ்சி, வஞ்சி, மதுரைபோன்ற பெருநகரங்களில், நகரத்தார் என்று அழைக்கப் பெறும் நகர அவையினர் இருந்து நகரப்பணிகளைக் கண்காணித்து வந்தனர் என்றும் தெரியவருகிறது. ஊர்ப்பணி, நகரப் பணிகளைக் கவணிப்பதற்காக இந்தக் காலத்தில் ஊராட்சி மன்றம்..... நகராட்சி மன்றம் போன்ற வற்றில் 'கணக்குக்குழு', 'பொது நலக்குழு, 'வரிக்குழு', 'பணி கள் குழு' என்று பலவேறு குழுக்கள் அமைக்கப்படுவதைப் போலவே, பண்டைத் தமிழகத்தின் ஊரவையில் பலவகை யான குழுக்கள் இருந்து பணியாற்றி வந்திருக்கின்றன. இப்பொழுது குழு' (Committee) என்று அழைக்கப்பெறு கின்ற ஒன்று, அப்பொழுது 'வாரியம்' என்று அழைக்கப் பெற்றது.வாரியம் என்பது மேற்பார்வை அல்லது மேலாண் மை என்று பொருள்படுவதாகும். கல்வெட்டுக்களும், செப்பேடுகளும் தரும் செய்திகளி லிருந்து வாரியங்கள் பலவற்றின் பெயர்களும், அவற்றின்
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/111
Appearance