110 பணிகளும், அவை பற்றிய குறிப்புகளும் ஓரளவுக்குத் தெரிய வருகின்றன. ஆட்டை வாரியம்: இது ஊர் வாரியங்களிலே மிக முக்கிய மான தலைமை வாரியமாகும். இந்த வாரியத்திற்குப் பன்னிரண்டு பேர்கள் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர். ஊரின் பொதுப்பணிகளைக் கவனிப்பது, அறச் செயல்களை ஆற்றுவது, குற்றத்தீர்ப்பு வழங்குவது போன்ற பணிகள் இந்த வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. தோட்ட வாரியம்: இந்த வாரியத்தில் பன்னிரண்டு பேர்கள் இடம் பெற்றனர். தோட்டம், தோப்பு, கொல்லை, புன்செய் நிலங்கள் முதலியவற்றைக் கவனிப்பது இந்த வாரியத்தின் கடமையாகும். கழனி வாரியம்: இந்த வாரியத்தில் ஆறு பேர்கள் இடம் பெற்றனர். நன்செய் நிலங்களைக் கவனிப்பது இந்த வாரி யத்தின் கடமையாகும். ஏரி வாரியம்: இதில் ஆறு பேர்கள் இடம் பெற்றனர்.ஏரி. குளம், ஆறு ஆகியவைகளில் தக்க காலத்தில் நீரைத் தேக்கு வது, விடுவது போன்ற பணிகளை இந்த வாரியம் மேற்பார்வை செய்தது. கலிங்கு வாரியம்: இதில் அறுவர் இடம் பெற்றனர். ஏரி, குளம், ஆறு முதலியவைகளிலுள்ள கலிங்குகளையும், மதகு களையும் கவனிப்பது இந்த வாரியத்தின் பொறுப்பாகும். பொன் வாரியம்: இதில் ஆறு உறுப்பினர்கள் இருப்பர். ஊரில் வழங்கும் நாணயங்களில் கள்ள நாணயங்களையும், பழுதுபட்ட நாணயங்களையும் களைந்து எடுத்துவிட்டு, நல்ல நாணயங்களை மட்டும் புழக்கத்தில் விடுவது இந்த வாரி யத்தின் கடமையாகும். கணக்கு வாரியம்: இந்த வாரியத்திற்கு அறுவர் தேர்ந் தெடுக்கப்படுவர். ஊர்ப் பொதுக்கணக்குகளைக் கவனித்துச் சீர் செய்து வைத்திருப்பது இந்த வாரியத்தின் பணியாகும்.
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/112
Appearance