உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111 பஞ்ச வாரியம்: இந்த வாரியத்திற்கு ஆறு பேர்கள் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பஞ்ச காலத்தில் பயன்படும்படி, நன்றாக விளைவு ஏற்படும் காலத்தில் உணவுப்பொருள்களைத் தொகுத்து வைப்பது, இந்த வாரியத் தின் பணியாகும். தடிவழி வாரியம்: இதில் ஆறு உறுப்பினர்கள் இடம் பெறு வர். ஊரிலும் பக்கத்திலுமுள்ள பெருவழிகளைக் கவனிப்பது இந்த வாரியத்தின் கடமையாகும். குடும்ப வாரியம்: இந்த வாரியத்திற்கு ஆறுபேர் தேர்ந் தெடுக்கப்படுவர். ஊரில் அமைந்துள்ள குடும்பங்களின் நலன் களைக் கவனிப்பது இதன் பணியாகும். இந்த வாரியங்கள் எல்லாமுமே எல்லா ஊர்களிலும் இருந்தன என்று சொல்வதற்கில்லை. சிற்சில வாரியங்கள் சில ஊர்களில் இருப்பதில்லை. ஆட்டை வாரியம், தோட்ட வாரியம், ஏரிவாரியம், பொன் வாரியம், பஞ்சவாரியம் என்னும் ஐந்து வாரியங்கள் எல்லா ஊர்களிலும் இருந்து வந்தன. ஒவ்வொரு வாரியமும் தனித்தனியாக அழைக்கப்பெறும் போது 'சிறுகுறி' என்றும், எல்லா வாரியமும் சேர்ந்து அழைக் கப்பெறும்போது 'பெருங்குறி' என்றும் சொல்லப்பட்டன. ஒவ்வொரு ஊரவையின் தேர்தலும் அரசனின் ஆணையின் பேரில்தான் நடைபெறும். அரசன் நாட்டதிகாரிக்காவது (பல ஊர்கள் சேர்ந்த நாட்டின் பகுதிக்கு அதிகாரி), ஊரதி காரிக்காவது, ஊர்ப் பெருமகனுக்காவது, தேர்தல் விதிகள் அடங்கிய ஆணையை அனுப்பிவைத்துத் தேர்தலை நடத்தி வைக்கும்படி கூறுவான். தேர்தல் ஆணையைப் பெற்ற அதிகாரி, ஊர்ப் பொது யில்லில் ஊரவையினரைக் கூட்டி, அரசனது ஆணையைக் காட்டுவான். அவர்கள் அதனைத் தலைமேற்கொண்டு, கண் ணில் ஒற்றி, அதற்கு மதிப்பு அளிப்பர்.