112 ஆணை அதிகாரி தேர்தல் நாளை முறைப்படி பறை யறைந்து ஊர்மக்களுக்குத் தெரிவித்து, பெரியவர் முதல் சிறி யவர்வரை அனைவரையும் ஊர்ப்பொதுயில்லில் கூட்டுவான். சிலவேளைகளில் தேர்தல் கூட்டம் கோயில் பொதுமண்டபத் தில் கூட்டப்பெறும். புதிய ஆளுங்கணத்தில் இருந்து வாரியஞ் செய்யக்கூடியவர்களைக் கூடியிருப்போர் தேர்ந்தெடுப்பர். ஒவ்வொரு குடும்பாரும், தத்தம் ஊரின் நிலைமைக்கும், அளவுக்கும், தேவைக்கும் ஏற்ப, ஒருவரையோ அல்லது பலரையோ குடும்பின் சார்பாகத் தேர்ந்தெடுப்பர். ஒரு தடவை க்கு ஒருவர் வீதம் குடவோலை வாயிலாக ஒவ்வொருவரும் தேர்ந்தெடுக்கப்படுவர். முதலில் தேர்தல் அதிகாரி, அரசாணைத் திருமுகத்தி லுள்ள தேர்தல் விதிகளைப் பொதுமக்களுக்குப் படித்துக் காட்டுவார். தேர்தல் நடைபெறவேண்டிய முறைபற்றியும், தேர்ந்தெடுப்பதற்கான தகுதிபடைத்தவர் யார், தகுதியில் லாதவர்கள் யார் என்பது பற்றியும், எந்தெந்த வாரியங்களுக் குத் தேர்தல் நடைபெறவேண்டும் என்பது பற்றியும், ஊர் அவை உறுப்பினர்களின் கடமைகள் பற்றியும் அரசாணைத் திருமுகத்தில் விரிவாக விளக்கப்பட்டிருக்கும். கல்வெட்டுக்களில் காணப்படுகின்ற செய்திகளின்படி தேர்ந்தெடுக்கப்படுகின்ற வாரிய உறுப்பினர்க்குக் கீழ்க்கண்ட தகுதிகள் இருக்கவேண்டும். 1. காணிக்கடன் செலுத்தும் நிலம் கால் வேலிக் குக் குறையாமல் உடைமை. 2. சொந்தமனையிற் கட்டிய வீட்டில் குடியிருத்தல். 3. சிறந்த கல்வியுடைமை. 4. செயலை நிறைவேற்றும் ஆற்றலுடைமை. 5. அறநெறியில் ஈட்டிய பொருளைக்கொண்டு செம்மையான வாழ்க்கை நடத்துதல்.
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/114
Appearance