உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 வில் இரண்டு பெரிய வெறுங்குடங்கள் வைக்கப்பட்டிருக்கும். ஒரு குடம் குடும்புவாரி கட்டுக்களைப்போட்டு வைப்பதற்கும், மற்றொரு குடம் சுட்டு ஓலைகளைப் பிரித்துப் போட்டுக் குலுக்குவதற்கும் ஆகும். கட்டப்பெற்று, குடும்பின் பொறுத்தப்படும். பின்னர் கூட்டத்திலுள்ளவர்களில் மிகவும் வயதுமுதிர்ந்த பெரிய வர் ஒருவர் எழுந்து, கட்டுகள் போடும் குடத்தை எடுத்து அதில் ஒன்றுமில்லை யென்பதை எல்லோரும் அறியுமாறு காட்டுவார். பின்னர் ஒவ்வொரு குடும்பைச்சேர்ந்த குட வோலையாளரும், தத்தம் குடும்பில் தாம்தாம் யாரை விரும்பு கிறார்களோ அவரின் பெயரை ஓலையில் வரைந்து, அந்த ஓலைச்சீட்டைக் கொடுப்பர். ஓலைச் சீட்டுகளெல்லாம் குடும்புவாரியாகச் சேர்த்துக் பெயர்பொறித்த வாயோலை அந்தக் கட்டு உரிய இடத்தில் இடப்பெறும். எல்லாக் குடும்பு களின் கட்டுக்களும் அந்தக் குடத்தில் போடப்படும். அடுத்து அந்த முதியவர், கூட்டத்திலுள்ள சின்னஞ்சிறு பிள்ளை ஒன்றை அழைத்துக் குடத்திலிருந்து ஒரு கட்டை வெளியே எடுக்கச் சொல்லுவார். அந்தக் கட்டைக் குலைத்து, ஒலை களையெல்லாம் மற்றொரு குடத்தில் போடச் சொல்லுவார். பிறகு குடம் அனைவரும் அறியும்படி குலுக்கப்படும். அடுத்து அந்தச் சிறுபிள்ளையைவிட்டு அந்தக் குடத்திலிருந்து ஒரு ஓலையை எடுக்கச் சொல்லுவார். அந்தச் சிறுவன் அந்தப் படிக்கு ஒரு ஓலையை எடுத்துத் தேர்தல் ஆணையாளர் கையில் கொடுப்பான். அந்தத் தேர்தல் அதிகாரி தன் வலக் கை விரல் ஐந்தையும் விரித்துக் காட்டி, அந்த ஓலையை வாங்கி, கூட்டத்திலுள்ள அனைவரும் கேட்கும்படி, அந்த ஓலையிலுள்ள பெயரைப் படித்துக் காட்டுவார். அந்த ஓலை யைப் பெரியவர்கள் பலரும் வாங்கிப் படித்துப் பார்ப்பர். அந்தப் பெயர் தேர்தல் ஆணையாளரால் ஒரு ஓலையில் குறிக் கப்பெறும். இவ்வாறே எல்லா உறுப்பினரின் பெயர்களும் குறிக்கப்படும், பின்னர், வாரிய வகுப்பு நடைபெறும். குட வோலை முறையாலேயே வாரியத்திற்கான உறுப்பினர்கள்,