உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 அந்த ஊரவை உறுப்பினர்களிலிருந்து முறைப்படி தேர்ந் தெடுக்கப்படுவர். ஊர்க் குற்றப் புத்தகத்தில் பதிவுசெய்யப் பெறுவர். தேர்தல் விதிமுறைகள் அவ்வப்போதும், ஊருக்கு ஏற்ற வகையிலும், அரசனால் திருத்தி அமைக்கப்படுவதுண்டு என்றும் கல்வெட்டுகளிலிருந்து தெரியவருகிறது. . குடவோலை முறையினால் குடியாட்சி நடைபெற்ற வரலாற்றை, இடைக்காலக் கல்வெட்டுக்களாலும் செப்பேடு களாலும் தெரிந்துகொள்ளமுடிகிறது. என்றாலும், இத்தகைய குடியாட்சி முறை சங்ககாலம் முதற்கொண்டே நின்று நிலவி வந்திருக்கின்றது என்றுதான் கொள்ளவேண்டியிருக்கிறது. சங்க இலக்கியங்களில் காணப்படும் சிறுசிறு குறிப்புக்கள் அந்த உண்மையைப் புலப்படுத்துகின்றன. குட பண்டைத் தமிழர்கள் தலைசிறந்த நாகரிகத்தையும். பண்பாட்டையும் கொண்டிருந்தனர் என்பதற்குக் வோலைத் தேர்வுமுறை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.