15. ஞாபக சக்தி மறதி 'ஞாபக மறதி' என்பது உலக மக்களின் அன்றாட வாழ்வில் அடிக்கடி காணப்படுவதொன்று. 'ஏதோ மறதியாக வைத்துவிட்டேன், 'எங்கே வைத்தேன் என்று ஞாபகம் இல்லையே' என்று பலவாறு கூறுகிறோமே ஒழிய, ஏற்பட்டதின் காரணம் என்ன? எப்பொழுதும், எல்லா வற்றையும் எல்லோரும் மறந்துவிடுகிறோமா? என்று நாம் ஆராய்ந்து பார்பதில்லை. நாள் தவறினாலும், காலட்சேபம் செய்வது தவறுவதில்லை நம் நாட்டில்; வேளை தவறினாலும் விரதம் தவறுவதில்லை; பூஜை புனஸ்காரங்களுக்கோ குறை வேதுமில்லை; இந்த ஆராய்ச்சிக்கு நேரம் இல்லை. இந்த வித ஆராய்ச்சியில் கவனம் செலுத்தும் ஒருசிலருக்கும், "பைத்தியக் கார மனுஷனய்யா நீர்! பகவான் சிருஷ்டி விநோதங்களில் இதுவும் ஒன்றுவோய்! இதற்கெல்லாம் ஏன், எப்படின்னு தோண்டித் துருவிக் கேட்டுண்டு இருந்தா எப்படி ஓய்?" என்ற கேலியும் கிண்டலும் கலந்த பேச்சுத்தான் கிடைக்கிறது. மேனாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில், மனிதனின் ணக்கூறுபாடுகள் பற்றிய ஆராய்ச்சி அடிக்கடி நடத்தப்பட்டு வருகின்றது. அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் செய்த ஆராய்ச்சி யின் முடிவாக, 'ஞாபகசக்தி' யுத்தகாலத்திற்கு முன்பு இருந்த தைவிடத் தற்சமயம் மக்களிடம் பொதுவாக அதிகமாக இருக்கிறது என்றும், 'ஞாபகசக்தி' முன்பு இருந்ததைவிடத் தற்பொழுது அதிகம், வருங்காலத்தில் இன்னும் அதிகமா
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/118
Appearance