117 கலாம் என்றும் கருதுகிறார். 'ஞாபகசக்தி' முன்பு இருந்ததை விட இப்பொழுது அதிகமாகி வருகிறது ஏன் என்பதற்கான காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. நமக்கு ஞாபகமூட்டுவது எது? எப்படி? என்பதுபற்றி நாம் நினைத்துப் பார்த்ததில்லை. நாம் ஏதாவது ஒரு பொருளைப் பார்க்கும் பொழுதோ, அல்லது ஒரு பொருளைக் கேட்கும் பொழுதோ அந்தச் செய்தி 600,000,00 நுண்ணிய நரம்பு அறைகளின் மூலமும், கணக்கிலடங்கா நரம்புத்தசைச் சேர்க்கையின் மூலமும் நமது மூளைக்கு அனுப்பப்படுகிறது. செய்தி அறிந்ததாகவோ அல்லது அடிக்கடி திருப்பிக் கூறப்படு வதாகவோ இருந்தால், நரம்பு அறைகள் அவற்றை எளிதில் அறிந்து கொள்ளும். இதைத்தான் 'நினைவு', 'ஞாபகம்' என அழைக்கிறோம். இந்த நினைவுத்திறன் அதிகமாக இருப்ப தற்குப் பொருள்களைக் கவனத்துடன் கற்கவோ, கேட்கவோ வேண்டுவது இன்றியமைாதது. இம்மாதிரிச் சிலரையும், அவர் அதைப் பெற்ற வழியையும் தெரிந்து கொள்வதின்மூலம், நம் நினைவுத்திறனை அதிகப்படுத்தும் முறையைக் காண்பது எளிது. லெஸ்லி வெல்ச் (Leslie Welch) என்பார் விளையாட்டு உலகைப்பற்றிய புள்ளி விபரங்களோ வரலாறுகளோ கூறுவதில் நிபுணர். சிறுவயதில் இருந்தே இவர் விளையாட்டுக் களில் அக்கரைகொண்டு, கவனத்துடன் கற்றதால், அது பற்றிய செய்திகள் அவர் மூளையில் ஆழ்ந்து படிந்தன. இன்றைக்கு, பிரிட்டனிலோ அல்லது உலகப் பந்தயங்கள் பற்றியோ கேட்கப்படும் எல்லாவித வினாக்களுக்கும் விடை இறுக்கும் ஆற்றலும், அறிவும், செய்திகளைத் தொகுத்துத் தகுந்த புள்ளி விவரங்களுடனும், வரலாற்றுடனும் கூறும் நினைவுத்திறனும் பெற்று வாழ்கிறார். எந்த ஆண்டில் நடந்த எந்த விளையாட்டு பற்றியும், புள்ளிவிவரம் பற்றியும் கேட்ட மாத்திரத்தில் துல்லியமாகக் கொடுக்க முடிகிறது. விளையாட்டுச் செய்திகள் பதிவு செய்யப்பட்ட இயந்திரம் போல் அவரது மூளை இயங்குகிறது.
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/119
Appearance