10 மேலே ஈடுபட் நீண்டகாலம் வரலாற்று ஆராய்ச்சிப் பணியில் டிருந்த அருட்டிரு ஈராசுப் பாதிரியார் (Father Heras) குறிப்பிட்டார். சுட்டிக் காட்டப் பட்டுள்ள நாகரிகங்கள் பலவற்றிற்கும் தாய்மையானதாகவும். முன்னோடியானதாகவும் விளங்கியது திராவிட நாகரிகமே என்று, அவர் அறுதியிட்டு உறுதியாகக் கூறினார். அது காரணம் பற்றித்தான், தம்மை "நான் ஸ்பெயின் நாட்டி லிருந்து வந்த ஒரு திராவிடன்' (\ am a Dravidian from Spain) என்று சொல்லிக்கொள்வதிலே, அவர் பூரிப்பும் பெருமையும் கொண்டார். நாகரிகமும் பண்பாடும் உலகிலுள்ள பல்வேறு மக்கள் தொகுப்புகளின் அருமை பெருமைகளையும், சீரையும் சிறப்பையும் அளவிட்டு எடை போட்டுப் பார்ப்பதற்கு, இரண்டு அளவைகளை வைத்திருக் கிறார்கள் அறிஞர் பெருமக்கள். ஒன்று, 'நாகரிகம்' (Civiliza- tion) என்பது; மற்றொன்று, 'பண்பாடு' (Culture) என்பது. 'நாகரிகம்' என்பது மாந்தனது புறத்தோற்ற வளர்ச்சியின் செம்மையைக் குறிப்பது; 'பண்பாடு' என்பது மாந்தனது அகவுணர்வு வளர்ச்சியின் சீர்மையைக் குறிப்பது. மாந்தன் தனது அறிவுத்திறனாலும், ஆற்றல்திறனாலும், உள்ளுணர் வுத்திறனாலும் பேணி வளர்த்துவரும் சுவையான உணவு- அழகான உடை - வசதியான உறையுள் - வாய்ப்பான போக்கு - வரத்துப்பொறிகள் - வளம் மிகுந்த நாடு - நலம் மிகுந்தநகரங் கள் - கல்விச் சாலைகள் - கலைக் கூடங்கள் - இசை - கூத்து- நாடகம் நாட்டியம் - ஓவியம் சிற்பம் விளையாட்டு வளர்ந்து நிற்கும் வாணிகம்-சிறந்து செயல்படும் தொழிற் சாலைகள் - அழகான சாலை - வனப்பான பூஞ்சோலை போன்றவைகளெல்லாம் மாந்தனது புறத்தோற்றப் பொலிவு குறிக்கும் நாகரிகத்தின்பாற் பட்டவைகளாகும். மாந்தன் தன் சிந்தனையறிவுத் திறத்தாலும், உள்ளுணர்வுத் திறத்தாலும் உள்ளத்தைப் பண்படுத்திப் பண்படுத்தி அன்பு களைக் - - - -
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/12
Appearance