உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 கிரித்தியன் கேநெக்கர் (Christian Henecker) என்ற செர் மானியச் சிறுவன் பிறந்த ஐந்து ஆண்டுகள் முடியும் முன்பு 1725ஆம் ஆண்டில் சூன் திங்கள் 27ஆம் நாள் இறந்தான். உலகில் இச்சிறுவனைத் தோற்கடிக்கும் அளவு சிறுவயதில் அவ்வளவு நினைவுத்திறன் கொண்டவர்கள் இதுவரை இல்லை எனலாம். நான்கு வயது முடியும் முன்பே பூகோளம், வரலாறு இப்பகுதிகளில் கேட்கப்படும் எந்த வினாவிற்கும் விடை யிறுக்கும் ஆற்றல் கொண்டிருந்தான். ஏறத்தாழ 'பைபிளின் எல்லாப் பகுதியையும் தவறின்றி ஒப்பிக்கும் ஆற்றலுடன், இலத்தீன் பிரெஞ்சு மொழிகளையும் தன் தாய்மொழியான செர்மனிபோல் இலகுவாகவும் தங்கு தடையின்றியும் பேசும் அறிவையும் பெற்றிருந்தான் என்பதற்குச் சான்றுகள் பல உள. இச்சிறுவனின் புகழ் ஐரோப்பா முழுவதும் பரவியது. சுவீடன் நாட்டு மன்னன் இவனையழைத்து, ஆற்றலும் அறிவும் கண்டு பெரிதும் போற்றினான். இன்னும் கொஞ்சகாலம் உயிருட னிருந்தால், இதுவரை உலகுகண்டிராத ஒரு பெரிய அறிஞ னாகவும், நிறைந்த நினைவுத்திறன் உடையவனாகவும் இருந் திருக்கக்கூடும். மிகவும் ஒல்லியாகவும், பலம் குன்றியும் இருந்த தால், வியத்தகு மூளையுடன் ஒத்துழைக்கும் சக்தி இழந்து இறந்தான். ரூபன்ச்டீன் (Rubenstein) என்பவர் பியானோ வாத்தியத்தை வாசிப்பதில் நிபுணர். இவரது நினைவுத் திறனும், பாட்டுக்களைக் கவனப்படுத்தும் வழியும் மிகவும் உயர்ந்தவை, இவர் தம் நண்பர் ஒருவரிடம், ஒருசமயம், "பாட்டு இயற்றுவதில் வல்லவர்களின் ஏடுகள் முழுவதும் காணாமல் போய்விட்டாலும், அவற்றை அப்படியே பிழை யின்றி எழுத என்னால் முடியும்" என்றார். இன்று நாம் கல்லி கற்று அறிவுடையோராகத் திகழ் வதற்குக் காரமணாய், கல்வி முறையை முதன்முதல் முறை யாக இந்நாட்டில் வகுத்து இயங்கச்செய்த டி.பி. மெகாலே என்ற ஆங்கில அறிஞர், உயர்ந்த நினைவுத்திறன் உடையவர். இவர் மற்றொரு ஆங்கில அறிஞரும், கவிஞருமான மில்டன்