119 என்பார் எழுதிய 'சுவர்க்கத்தின் இழப்பு' (Paradise Lost Paradise Regain) என்ற பெரும் கவிதைகளை, வரி பிறழாமல் ஒப்பிக்கும் ஆற்றல் பெற்றிருந்தார். . யுத்தத்தில் முன்பு பிரச்லா (Breslau) என்னும் நகரத்தில் விசித்திரமான விளம்பரம் ஒன்று வெளியாகியிருந்தது. புதிதாகத் திறக்கப்படவிருக்கும் செய்தி தெரிவிக்கும் அலுவல கத்திற்கு ஓர் ஆள் தேவை என்றும், அதிக நினைவுத்திறன் கொண்டவர்தான் தேவை என்றும் அதில் கண்டிருந்தது. அதன்படி அந்த வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆள் கெர் கெல்மட் ஓசிக் ((Hers Helmut Ossig) என்பவர். மிகக் குறுகிய கால அளவில் ஓசிக், பிரச்லாவின் தொலைபேசி விவரத் திரட்டில் (Telephone Directory) உள்ள 60,000 பெயர் கயுைம், அவர்களுக்கு உரிய தொலைபேசி எண்ணுடன் நினைவில்வைத்து நினைத்த நேரத்தில் சொல்லும் ஆற்றலைப் பெற்றார். இதுதவிர, 20,000 தேதிகளும், பிரச்லாவிலிருந்து வெளியிடங்களுக்குச் செல்லும் கணக்கற்ற சாலை, இரயில் போக்குவரத்துப் பாதைகளும், கால அட்டவணையில் உள்ள வைகளையும் துல்லிதமாக நினைவில் வைத்திருந்தார். இது பற்றியே இவருக்கு உயிருள்ள களஞ்சியம் (The Living Encyclopaedia) என்ற சிறப்புப் பெயர் வழங்கலாயிற்று. காலஞ்சென்ற பீல்டு மார்சல் ச்மட்ச் (Field Marshal Smuts) ஆப்பிரிக்காவில் நிறவெறி கொண்டு கருப்பு இனத் தவரை இழித்தும் பழித்தும் நடந்தவர். இவருடைய சொந்த நூலகத்தில் 5,000 புத்தகங்கள் வரை வைத்திருத்தார். இப்புத்தகங்களில் வரும் வரிகளையோ அல்லது வாசகங்களை யோ யாராவது கூறினால், அவை எந்தப் புத்தகத்தில் எந்தப் பக்கத்தில் இருக்கிறது எனத் தவறாமல் கூறிவிடும் அளவிற்கு இவர் நினைவுத்திறன் படைத்திருந்தார். கான்யர்ச் ச்மித் (Conyers Smith) யார்க்சைரில் வசிக்கும் முதியவர். அறுபது வயதுடையவர். இந்த வயதிலும் தேதிகளைக் கணக்காகக் கூறும் அளவிற்கு நினைவுத்திறன்
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/121
Appearance