120 கொண்டிருக்கிறார். ஒருமுறை இவர் கவனத்துக்கு வரும் தேதியை இவர் மறப்பதேயில்லை. உலகில் புகழ்பெற்ற மனி தர்கள் எவரின் பிறந்த தேதியைக் கேட்டாலும் உடனே துள் ளிதமாகக் கூறுகிறார். தான் வசிக்கும் இடத்தைச் சுற்றிலும் உள்ள இடங்களில் வாழும் மக்கள் வைத்திருக்கும் கார் எண் களை எல்லாம் நன்றாக நினைவில் வைத்திருக்கிறார். ஒரு காரின் எண் அவசரமாகத் தேவைப்பட்டால், போலீஸ் ரெக்கார்டுகளைப் பார்த்துத் தேடுவதற்குள் சமித்தைக் கேட்டு அறிந்துகொள்வது உண்டு என்று கூறப்படுகிறது. அமரர் என்று போற்றப்பட்ட மொசார்த் (Mozart) தின் நினைவுத்திறன் யாவரும் கண்டு வியக்கத்தக்கதொன்று. இவர் 1770ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 11ஆம் நாள், புனிதவாரம் எனப் போற்றப்படும் வாரத்தில் ரோம் நகருக்கு வந்தார். சிச்டைன் தேவாலயத்தில் (Sistine Church), அலிக்ரி (Alegri) என்பவரின் மிசரிரி என்ற பாட்டைக் கேட்டார். இப்பாட்டை எழுதிக்கொண்டு செல்ல எவரும் அதிகாரிகளால் அனுமதிக்கப் படவில்லை. ஆனால் பாட்டை ஒருமுறை கேட்ட மொசார்த் வீட்டிற்கு வந்ததும் வரிபிறழாமல் அப்பாட்டை அப்படியே எழுதிவிட்டார். இரண்டு நாள் கழித்துத் தான் எழுதியதில் தவறு இருந்தால் திருத்திக்கொள்ளும் நோக்கத்துடன் அதைத் தொப்பியில் மறைத்து வைத்துக்கொண்டு தேவாலயத்திற்குச் சென்றார். ஆனால் தவறு ஏதுமின்றி ஒன்பது பாகங்கள் கொண்ட அந்தப் பாட்டைச் சிறிதும் மாற்றாமல் அப்படியே எழுதியிருந்தார். இங்கிலாந்தின் மேற்குப்பாகத்தில் உள்ள ஒரு கிராமத் தில் ஒரு கிழவன் வசித்தான். நாற்பத்தைந்து ஆண்டுகளாக புதைக்கப்பட்ட மக்களின் பெயர், வயது, தேதி முதலியவற் றைக் குறிப்பாகக் கூறுவதுடன், ஒவ்வொரு புதையலின் போதும் துக்கத்துடன் உடன்வந்தவர்களின் பெயரைக்கூட நன்றாக நினைவில் வைத்திருந்தான். . பெரும் புகழ்வாய்ந்த போதகர் டாக்டர் மோபாத் (Dr.Moffath) ஆப்பிரிக்காவிலுள்ள நீக்ரோ இனத்தவர்களின்
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/122
Appearance