உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121 கூட்டம் ஒன்றில் ஒரு பெரும் உரையாற்றினார். அது முடிந்து திரும்பும்பொழுது, ஒரு நீக்ரோச்சிறுவனைச் சுற்றிப் பெரும் கூட்டம் கூடியிருந்ததைக் கண்டார். கூட்டத்தில் நடப்பது என்ன என்று அறியும் நோக்கத்துடன் அங்குச் சென்றார், நீக்ரோச் சிறுவன் சற்றுமுன் தான் நிகழ்த்திய உரையை அப் படியே ஒப்பித்துக்கொண்டிருந்தான். வார்த்தைகளை வெள் ளைப் பாதிரிபோல் உச்சரித்ததுடன், அவர் பேசும்பொழுது கையாண்ட பாணியையும், பழக்கத்தையும், அப்படியே செய்தான். யுத்தத்திற்கு முன்பு, அமெரிக்க உணவு விடுதி ஒன்றில் சாமான்கள் வைக்கும் அறைக்காவலனாக நீக்ரோ ஒருவன் வேலைபார்த்து வந்தான். விடுதிக்கு வருபவர்களின் முகத்தை ஒருமுறை பார்த்ததும் நன்றாக நினைவில் கொண்டு, அவர் கள் கேட்பதற்கு முன்பு அவரவர்களுடைய துணி, பெட்டி முதலியவற்றை எடுத்துக்கொடுப்பான். பெரும் விருந்துகள் நடக்கும்பொழுது, ஒரே சமயத்தில் 300க்கு அதிகமானவர் களின் பொருள்களை, அவரவர்கள் முகத்தைப் பார்த்தவுடன், சோதனை எதுவுமின்றிச் சரியாக எடுத்துக் கொடுத்துவிடும் அளவுக்கு ஆற்றல் பெற்றிருந்தான். விடுதிக்கு உடையவர், நீக்ரோ காவலாளி ஒருமுறைகூடத் தவறியதில்லை எனக் கூறினாராம். நடிகை லில்லா மெக்கார்தி (Lilla Mecarthy) பத்துவயதுச் சிறுமியாக இருந்தபொழுது, மில்ட்டனின் "சுவர்க்க இழப்பு" என்ற நூலின் இரண்டாம் புத்தகத்தை மனப்பாடம் செய்தால் ஒரு பவுன் இனாம் தருவதாக, அவருடைய தந்தை கூறினார். ஆசையும் ஆர்வமும் தூண்ட, அதிசயிக்கத்தக்க முறையில் அதைப் பாடம் செய்தாள். அதன்பிறகு உலகப்புகழ்பெற்ற செகப்பிரியரின் "ரோமியோவும் சூலியத்தும்" என்ற நாடகத் தைப் பாடம் செய்தால் மற்றுமொரு பவுன் தருவதாகக் கூறி தின் பேரில், லில்லா தவறுகள் ஏதுமின்றிப் பாடம் செய்து ஒப்பித்தாள். 21-8