122 பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில், இலண்டன் காலைப் பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியராக உட்ஃபால் Wood- fall என்பவர் பணியாற்றினார். அந்தக் காலத்தில், பாராளு மன்றத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பத்திரிக்கையில் வெளியிடு வதுபற்றி முடிவுசெய்யப்படாமல் இருந்தது. பாராளுமன்றத் தின் நிகழ்ச்சிகளைக் குறிப்பு எடுக்க யாரையும் அனுமதிப்ப தில்லை. உட்பால் பாராளுமன்றத்தில் இருந்து திரும்பியதும், அன்று நடந்த இருபதுக்கு மேற்பட்ட அங்கத்தினர்களின் பேச்சை, அப்படியே நினைவுபடுத்திப் பத்திரிகையில் எழுதி வந்தார். இதையொட்டி இவருக்கு "நினைவுத்திறலர்" என்ற பொருள்படும் உட்பால் எனப் பெயர் வழங்கப்பட்டது. 'பல விதி எண்களை நினைவுபடுத்திச் சொல்லமுடியுமா உங்களால்?' 'எண்' என்றால் உங்களுக்கு நெருங்கிய நண்பர் கள், உறவினர்கள் இவர்களின் தொலைபேசி அல்லது கார் எண், அல்லது வேறு முக்கியத்துவம் எதுவும் இல்லாத சில எண் களை உங்களால் நினைவில் இறுத்திப் பிறகு மறவாமல் கூற முடியுமா? எங்கே,உங்களால் முடிந்தால் கீழே குறிப்பிட்ட வைகளை முயன்று பாருங்கள். 883,726,941,738,992, 437, 675 - இந்த எண் களைப் பாடம் செய்யுங்கள், பிறகு வரிசையாகவும், பின்புற மிருந்து முன்புறமாகவும், தவறு ஏதுமின்றிக் கூறுங்கள். இவற் றைத் தவறின்றிச் செய்வது சுலபமாக இருந்தால் எண்களைப் பொறுத்தவரையில் உங்கள் நினைவுத்திறன் நன்றாக இருக் கிறது என்று பொருள்.
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/124
Appearance