16. கனவு உலகம் பல கனவு காண்பதைப்பற்றி விஞ்ஞான முறையில் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் கிடைத்த முடிவு களை வைத்துப் பார்த்தால், இதுவரை "கனவு' என்பதைப் பற்றி நம்மில் பலர் கொண்டுள்ள கருத்துக்கள் தவறு என்பது தெரியும். "நான் கனவு காண்பதே இல்லை!" இப்படிச் சிலர் கூறு கிறார்கள். ஆனால் இது உண்மையல்ல; உறங்கும்பொழுது எல்லோரும் கனவு காண்கிறார்கள். அதைப்பற்றிப் பிறகு ஞாபகம் வந்தாலும், வராமற்போனாலும், கனவு ஒவ்வொரு நாள் இரவும் வந்தபடிதான் இருக்கிறது. எட்டுமணி நேரம் தூங்கினால், ஒன்றரை அல்லது இரண்டு மணி நேரமாவது கனவு காண்பதாக இருக்கும். ஓர் இரவில் கனவுகள் தொடர்ச்சியாக வருவதில்லை. 20, 30 நிமிடங்கள் விட்டு விட்டுக் கனவுகள் வருகின்றன! "மனத்தில் அதிகமான குழப்பமோ, சிக்கலோ இருந்தால் கனவுகள் வரும்!' அப்படிக் கிடையாது. உங்களை வாட்டுகிற சிக்கல்களும் பிரச்சினைகளும் கனவுகளில் இடம் பெறலாம். ஆனால், அவைகள்தான் கனவுகளுக்குக் காரணமாக இருப்ப தாகக் கூறமுடியாது. tr தூக்கத்தில் புரள்வதும் திரும்புவதும் தூங்குபவர் கனவு காண்பதைத் தெரிவிக்கிறது!" இந்தக் கருத்தும் சரியானதல்ல! மாறாக, கனவு காணும்பொழுது, கை கால்களும், உடலும் அசையாமல் இருக்கின்றன!
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/125
Appearance