உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 "கனவில் மிக வேகமாகக் காட்சிகள் வந்து போய்விடு கின்றன! இந்த நம்பிக்கையும் சரியல்ல. விழித்திருக்கும் பொழுது காரியங்கள் எவ்வளவு மெதுவாக நடைபெறு கின்றனவோ அதே மாதிரிதான் கனவிலும் காரியங்கள் நடை பெறுவதாகத் தோன்றும். "ஆண்களைவிடப் பெண்கள் அதிகமாகக் கனவு காண் கிறார்கள்!" இந்தக் கருத்தும் சரியானதல்ல. ஆண்களும் பெண்களும் கனவுகாண்பதில் ஒரே மாதிரியாகத்தான் இருக் கிறார்கள்! "கற்பனை செய்பவர்களும், கலையில் ஈடுபாடு கொண்ட வர்களும் மற்றவர்களைவிட அதிகமாகக் கனவு காண்கிறார். கள்." கற்பனா சக்தியுள்ளவர்களும் மந்த புத்தி யுடையவர் களும்- எல்லோரும் ஒரே அளவுதான் கனவைப் பெறுகிறார் கள். சூழ்நிலைக்கும், அவரவர்களுக்குத் தெரிந்த அளவுக்கும் தகுந்தபடி கனவில் மாறுதல்கள் இருக்கலாம்! கனவு காண்கிற நேரம் பெரும்பாலும் எல்லோருக்கும் ஒன்றாகவே இருக்கிறது! இதுபோல் கனவைப்பற்றிய புதுமையான பல கருத்துக் கள், நீண்ட ஆராய்ச்சிக்களுக்குப் பின் வெளிவந்துள்ளன. கனவுபற்றிய உண்மைகளைக் கண்டறிய அமெரிக்காவில் டாக்டர் நத்தானியன் கிளைட்மன் என்ற தத்துவப் பேராசிரியர் ஆராய்ச்சிகளை நடத்தினார். "தூங்குகிற ஆராய்ச்சிக் கூடங்களில்" கனவுபற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நானூறு பேர்களுக்கு மேல் இந்த ஆராய்ச்சிக்கூடத்தில் ஆராயப்பட்டனர். அவர்கள் தூங்கும்பொழுது, அவர்களுடைய உடலில் ஏற்படும் நுண்ணிய அசைவுகளும், மாறுபாடுகளும் கவனிக்கப்பட்டன. சிலர் தாங்களாகவே, அங்கு தூங்குவதற்கு முன்வந்தனர். சிலருக்கு உதவிப்பணம் தரப்பட்டது. தூங்கப் போகுமுன், இரத்தத்துடிப்பை உணர்த்தவல்ல பட்டைகள் நெற்றியில் பொருத்தப்பட்டு, கண் அசைவுகளை உணர்த்தவல்ல கண்மூடி களும் அமைக்கப்பட்டன. இன்னும், முதுகிலும் மார்பிலும்