உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 பட்டைகள் கட்டப்பட்டு, இருதயத் துடிப்பும் அசைவுகளும் உணரப்பட்டன. இந்த அமைப்புக்களெல்லாம் மின்சாரக் கம்பிகள் வழியாக வேறொரு அறையில் ஆராய்ச்சியாளர்கள் முன்னால், நுண்ணிய அறிவிப்பு இயந்திரங்களில், துடிப்பு களையும், அசைவுகளையும் கோடிட்டு காட்டும். நெற்றியிலும் கண்ணிலும் மூடிகள் வைக்கப்படுவதால், தூங்குபவருக்கு அசௌகரியம் இல்லாதவாறு பார்க்கப்பட்டது. பிறகு விளக்கை அணைத்து படுக்கச் சொல்வார்கள். அவர் தூங்குவார். அவர் உடலில் ஏற்படும் இரத்தத்துடிப்பு மாற்றங்களும், கண்ணசைவு களும் வேறொரு அறையில் உடனுக்குடன் அறிவிக்கப்பட்டன. கண்ணசைவுகளில் ஒரு புதுமையை ஆராய்ச்சியாளர்கள் கண்டனர். நாம் நினைக்கிறபடி தூங்கும்பொழுது கண்கள் அசையாமலே இருந்துவிடுவதில்லை. தூங்கிய சிறிது நேரத்துக் கெல்லாம் அமைதியாக இருக்கிற கண்கள் அசைய ஆரம்பிக் கின்றன. அசைவு வரவரப் பலமாகிறது. 20 நிமிடங்கள் வரை கண் வேகமாக அசைகிறது; பின் அடங்குகிறது. இப்படி ஓர் இரவில் நான்கைந்து தடவைகள் கண் அசைவு வேகமாக ஆகிப் பின் தணிந்துவிடுகிறது. கண் அசைவுக்கும், கனவு காண்பதற்கும், ஏதாவது தொடர்பு இருக்குமா என்ற கேள்வி எழுந்தது.பின் கண்ணசைவு அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சிக்கருவி பதிவு செய்கிற நேரத்தில், திடீரென்று போய்த் தூங்குபவர்களை எழுப்பிக் கேட்டார்கள். பெரும்பாலும், ஒரு கனவின் மத்தியில் இருப்பதாக அவர்கள் கூறினார்கள். பிறகு கண்ணசைவுகளை மேலும் பாகுபடுத்திப் பார்த்தார் கள். ஒரு டென்னிஸ் பந்தயத்தைப் பார்ப்பதுபோலக் கனவு கண்டால், கண்கள் பக்கவாட்டில் அங்குமிங்கும் அசைந்து வந்தன. ஒரு மாடியில் ஏறுகிற ஒருவரைப் பார்ப்பதுபோலக் கனவு இருந்தால், கண் மேலும் கீழும் அசைந்து வந்தது! வெளியுலகில் விழித்திருக்கும்பொழுது ஒன்றைப் பார்த் தால், கண்ணசைவுகள் எப்படி ஏற்படுமோ, அப்படியேதான்