126 கனவு காணும்பொழுது, இமைகள் மூடியபடி கண்ணசைவுகள் ஏற்படுகின்றன! கனவு மத்தியில் இருப்பவரை எழுப்பி, என்ன கனவு காண்கிறாரென்பதைப் படுக்கையிலிருந்தபடியே சொல்லச் செய்து, அதை டேப் ரிகார்டில் பதிவு செய்து, பின் விளக்கை அணைத்து அவரை மீண்டும் தூங்கச் சொன்னார்கள். காலை யில் எழுந்ததும், இரவில் கண்ட கனவைப்பற்றிக் கேட்டால், தாங்கள் கனவு கண்டதாகவே அவர்கள் ஒத்துக்கொள்வ தில்லை. பிறகு டேப் ரிக்கார்டரைப் காட்டினாலும், சிலருக்குச் சரியாக ஞாபகம் இருப்பதில்லை. காலையில் ஞாபகப்படுத்த முடியாத காரணத்தினாலேயே, கனவு காணவில்லை என்று கூறிவிட முடியாது! போட்டுக் தூங்கும்பொழுது வெளியில் நடப்பவை சில, காண்கிற கனவுடன் பின்னிவிடக் கூடும். கனவுகாண்கிற ஒருவருடைய முதுகில் மெதுவாகத் தண்ணீர் தெளித்தார்கள். சில நிமிடங்கள் கழித்து அவரை எழுப்பிக் கேட்டதற்கு, "ஒரு நாடகத்தில் நான் நடித்துக்கொண்டிருந்தேன். கதாநாயகி திடீரென்று கீழே விழுந்துவிட்டாள். அவளைத் தூக்கி விடப்போனேன். திடீரென்று மேலே இருந்த கூரை விலகி, என் முதுகில் மழைத்தண்ணீர் கொட்டியது. அதில் நனைந்த படி கதாநாயகியை இழுத்துக்கொண்டு உள்ளே சென்றேன். அப்பொழுது நீங்கள் எழுப்பிவிட்டீர்கள்?" என்றார். முதுகில் உண்மையாகவே தண்ணீர்பட்டது கனவிலும் கலந்துவிட்டது. கனவுபற்றிய ஆராய்ச்சிகள் இன்னும் ஆரம்ப நிலையி லுள்ளன. இன்னும் அறிந்து கொள்ளக்கூடிய விவரங்கள் ஏராளமாக உள்ளன.
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/128
Appearance