17. அஞ்சல் சேர்ப்பிக்கும் அதிசயம் அஞ்சல் சேர்ப்பித்தல் என்பது, உலகின் பல பகுதிகளில் இன்னமும் தொல்லையும் துன்பமும் தரும் ஒரு தொழிலாகவே அஞ்சல்காரர்களால் கருதப்படுகின்றது. லீவிஸ்டன் என்ற பகுதியில், ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அஞ்சல்காரர் போய்ச் சேரமுடியாத அளவில், 7800 அடி உயரமுள்ள மலைக்குன்றுகள் இடைமறித்து நிற்கின்றன. அஞ்சல்கள் வைக்கப்பட்ட குழாயைப் பெருந்துப்பாக்கியில் வைத்துச் சுடுவதன்மூலம் அஞ்சல்களை அந்த குறிப்பிட்ட இடத்திற்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பிக்க வேண்டிய தொல்லைக்கு அஞ்சல்காரர்கள் ஆளாகிறார்கள். உருசிய நாட்டின் சில பகுதிகளில், அஞ்சல்காரர்கள் ஆயுதம் ஏந்தியவர்களாகச் செல்ல வேண்டியிருக்கிறது. இடைவழியில் தாக்க வரும் ஓநாய்களை எதிர்க்க அவர் களுக்கு ஆயுதம் தேவைப்படுகிறது. இந்தியாவில் பல பகுதிகளில் சிற்றூர்களுக்குச் செல்லும் அஞ்சல்காரர்கள் சதங்கை கட்டிய ஈட்டியையும், வெண்கல மணியையும் எடுத்துச் செல்லுகிறார்கள். கொடிய காட்டு விலங்குகளை அச்சுறுத்தித் துரத்த வெண்கல மணியை ஒலித்துக்கொண்டு போகவேண்டியவர்களாக இருக்கிறார்கள். விலங்குகளையும், வழிப்பறிக் கொள்ளைக்காரர்களையும் எதிர்த்துநிற்க அவர்கள் ஈட்டியை ஏந்துகிறார்கள். உள்நாட்டுச் மத்திய ஆப்பிரிக்காக் கண்டத்தில், சில சிற்றூர்களை அடைய, அஞ்சல்காரர்கள் நூற்றுக்கணக்கான
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/129
Appearance