உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டையவன் முடையவன் - வுடையவன் - - அருளுடையவன் 11 பண்புடையவன் முடையவன்-தீரமுடையவன் - - - ஈவுடையவன் - - ரக்க வீர உணர் பக்குவமுடையவன் ஊக்கமுடையவன் மானமுடையவன் மரியாதையுடைவன் - பற் - - - றுடையவன் பணிவுடையவன் தன்னலங் கருதாதவன். பிறர் நலம் பேணுபவன்- உடைமையை, உடலை, உயிரை, ஈபவன் என்ற வகையில் பெயரெடுப்பது, அகத்தோற்றப் பொலிவை உணர்த்தும் பண்பாட்டின்பாற் பட்டதாகும். நாகரிக வளர்ச்சிக்குப் பண்பாடு துணைபுரியும்; அதுபோலவே, பண்பாட்டு வளர்ச்சிக்கு நாகரிகம் உறுதுணையாக இருக்கும். தமிழர்கள் மிகப்பெருந் தொன்மைக் காலந்தொட்டு, சிறந்த நாகரிகம் வாய்ந்தவர்களாகவும், உயர்ந்த பண் பாட்டைக் கொண்டவர்களாகவும் வளர்ந்தோங்கி வந்த காரணத்தால்தான், தமிழர்கள் 'அரும்பெருந் தமிழர்' என்று அறிஞர்களால் போற்றப்படுகின்றனர். தமிழின் தனிச் சிறப்புகள் ஓர் இன மக்கள் நாகரிகத்திலும் பண்பாட்டிலும் சிறந் தோங்கி நிற்கவேண்டுமானால், அந்த இன மக்கள் பல்வேறு வகைப்பட்ட கலையறிவு மிக்கவர்களாக இருக்கவேண்டும். மக்கள் கலையறிவில் வல்லமைபெற வேண்டுமானால், அவர்கள் ஆழ்ந்து, பரந்து, உயர்ந்த கல்வியறிவு பெற்றவர் களாகத் திகழ வேண்டும். ஒரு சமூகம் சிறந்த கல்வியறிவு பெற வேண்டுமாயின், கற்பிக்கப்படும் மொழி செழுமை வாய்ந்த சிறந்த மொழியாக இயங்கவேண்டும். எனவே, மொழியின் சிறப்பைப் பொறுத்துக் கல்வியறிவும், கல்வியறி வின் திறத்தைப் பொறுத்துக் கலையறிவும், அக் கலையறி வின் ஆற்றலைப் பொறுத்து நாகரிகமும், பண்பாடும் சிறந்து விளங்கும் என்பது தெளிவுபடும். தமிழர் நாகரிகமும் பண்பாடும் மிகச் சிறப்பாக விளங்கி வருவதற்குக் காரணம். தமிழ்மொழியின் ஆற்றலும், அது