128 கடந்துபோக மைல்கள் காடுகளைக் வேண்டியிருக்கிறது. அண்மையில் ஓர் அஞ்சல்காரர் ஒரு சிங்கத்திற்கு அஞ்சி ஒருநாள் இரவு முழுவதும் ஒரு மரத்தில் தொத்திக் கொண் டிருந்தார். சிங்கம் அஞ்சல் பையைக் கடித்து, அஞ்சல் களையும் சிதறடித்துவிட்டுத் தனக்கு ஒன்றும் தின்பதற்குக் கிடைக்கவில்லை என்று போய்விட்டது. வேறோர் அஞ்சல் காரரை ஒருபொழுது பல நெருப்புக்கோழிகள் சேர்ந்து துரத்த ஆரம்பித்தன. அவர் ஓட்டமாய் ஓடி, ஒரு மரத்தின் உச்சியில் அடைக்கலம் புகுந்தார். பதினோராவது நூற்றாண்டில், செர்மனி நாட்டில் அஞ்சல்காரர்கள் விரைவாக நடந்து செல்வதற்குக் கம்பங் களைக் கால்களோடு சேர்த்துக் கட்டிக்கொண்டு பெருநடை போட்டு நடந்தார்களாம். ஸ்பெயின் நாட்டில் அஞ்சல்காரர்கள் காலங்கழித்து அஞ்சல்களைக் கொண்டுபோய்ச் சேர்த்தால், அவர்களைச் சிறையில் போடுவதும், அவர்களுக்கு அபராதம் விதிப்பதும் ஆன தண்டனைகள் வழங்கப்பட்டனவாம். இங்கிலாந்தில் பலூன்களைப் பறக்க விடுவதில் வல்லுநராகத் திகழ்ந்த ஜிப்சன் (Gypson) என்பவர்தான் வானவெளிமூலம் முதல் முத்திரையிடப்பட்ட அஞ்சலை அனுப்ப முயன்றார். முத்திரையிடப்பட்ட அஞ்சலைப் பலூனி லிருந்து கென்ட் பகுதியின்மேல் பறக்கும்போது கீழே போட்டாராம். இதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் ஜெப்ரீஸ் என்பவர் மேகமண்டலத்திற்குமேல் பலூனில் இருந்துகொண்டு, அஞ்சல்களை எழுதி எழுதிப் போட்டுக் கொண்டிருந்தாராம். "பலூன், மேகமண்டலத்திற்கு மேல்" என்று அஞ்சல்களில் தன் முகவரியைக் குறித்திருந்தாராம். 1871ஆம் ஆண்டில் பாரிசு நகரம் முற்றுகையிடப் பட்டிருந்தபோது, அஞ்சல்களை வெளியேற்றுவது என்பது இயலாததொன்றாக இருந்தது. தகரத்தில் உட்குடைவுள்ள பந்துகளைச் செய்து, அவற்றில் அஞ்சல்களை வைத்து, அவை
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/130
Appearance