129 களை நன்றாக அடைத்து, ஆற்றோட்டத்தோடு வெளியிடங் களுக்குப் போகும்படியான முறையைக் கண்டுபிடித்திருந் தார்கள். ய நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே பாரசீகம், கிரேக்கம், இந்தியா ஆகிய நாடுகளில் அஞ்சல்களை எடுத்துச் செல்லப் புறாக்கள் பெரிதும் பழக்கப்படுத்தப்பட் டிருந்திருக்கின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஐரோப்பாவில் புறா அஞ்சல் நிலையங்கள் ஆங்காங்கு ஏற்படுத்தப்பட் டிருக்கின்றன. இலண்டனிருந்து பாரிசு நகரத்திற்கு ஆறு மணி நேரத்தில் புறாக்கள் அஞ்சல்களை எடுத்துக்கொண்டு போய்ச் சேர்த்தன என்று தெரிய வருகிறது. பதினாறாவது நூற்றாண்டில், ஐரோப்பாக் கண்டத்தில், தனிப்பட்டோரின் நிறுவனங்கள் அஞ்சல்களைப் பட்டுவாடாச் செய்யும் பணியினை மேற்கொண்டிருந்தன. ஒரு நிறுவனம் கொண்டு செல்லும் அஞ்சல்களை இடைமறித்து, வழிப்பறிக் கொள்ளையடிப்பது மற்றொரு நிறுவனத்தின் வழக்கமாகவும் இருந்து வந்திருக்கிறது. அந்த நாட்களில் அஞ்சல்களை எடுத்துச் செல்வோர், இடைவழியில் அவைகளையெல்லாம் பிரித்துப் படித்துவிட்டுத்தான், பிற இடங்களுக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பது வழக்கம். ஒரு அஞ்சல்கூடப் பிரிக்கப் படாமல் போய்ச் சேருவதில்லை. மலேயாவில் அஞ்சல் மூட்டைகளை எடுத்துச் செல்ல யானைகளே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டன. இப்பொழுதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பாலைவனப் பகுதிகளில் ஒட்டகங்களைப் பயன்படுத்துகிறார்கள். அஞ்சல் காரர்கள் ஒட்டகத்தின்மேல் உட்கார்ந்துகொண்டு, அஞ்சலை ஒரு நீண்ட கழியின் நுனியில் கோர்த்துக்கொண்டு உரியவரிடம் நீட்டுவாராம். . ஆல்ப்சு மலையின் உச்சியிலிருக்கும் பிரெஞ்சுப் போர்ப் படைவீரர்களிடம் நாய்கள்தான் அஞ்சல்களைக் கொண்டு போய்ச் சேர்க்கின்றன. சீனாவில் அஞ்சல்காரர் காவடி
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/131
தோற்றம்