உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 மாதிரி தோளில் மூங்கிலை வைத்துக் கொண்டு, அதன் இரு பக்கமும் அஞ்சல்பைகளை மாட்டித் தொங்கவிட்டுக் கொண்டு நடந்துசென்று சிற்றூர்களில் அஞ்சல்களைச் சேர்ப்பிப்பார். கிறிஸ்துமஸ் காலத்தில் இங்கிலாந்தில், உறையில்லாமல் மடித்து அஞ்சல் பில்லை ஒட்டி அனுப்பப்பட்ட ஐந்து பவுன் நோட்டு, உரியவரிடம் போய்ச் சேர்ந்திருக்கிறது. ஒருபொழுது, இங்கிலாந்தில், "கடவுள், மேல் உலகம்' என்று முகவரி எழுதி அனுப்பப்பட்ட அஞ்சல் உறை, அந்த முகவரியுள்ள ஆள் அகப்படவில்லை என்று குறிக்கப்பட்டு, அதனை அனுப்பியவருக்கே திருப்பி அனுப்பப்பட்டதாம். சில அஞ்சல்கள், பல இடங்கள் சுற்றி அவற்றைப் பெற வேண்டியவர்கள் இறந்து முப்பது நாற்பது ஆண்டுகள் ஆன பிறகு, அவர்கள் இருப்பிடம் அறிந்து வந்துசேரும் நிகழ்ச்சி கள், கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் வியப்புக்குரியவை களாக இருந்துவருகின்றன. சென்ற ஆண்டில், அமெரிக்காவில், சாண்டோ கிளாஸ் என்று சொல்லப்படும் ஒரு மிகச்சிறிய நகரில் கிருஸ்துமஸ் நாளில்மட்டும், 40,000 அஞ்சல்களும்,கட்டுகளும் வெளியிடங் களுக்கு அனுப்பட்டனவாம். அமெரிக்காவில், குறிப்பிட்ட பெரு நகரங்களில், குறைந்தது பகலில் ஆறு தடவைகளிலும், இரவில் மூன்று தடவைகளிலும் அஞ்சல்கள் பட்டுவாடாச் செய்யப்படுகின்றன வாம். இங்கிலாந்தில் அரசனைவிட அஞ்சலுக்கு மிகவான மதிப்பு நீண்ட காலமாகவே கொடுக்கப்பட்டுவருகிறது. அஞ்சல் வண்டிகள் வருகின்றன என்றால், அவற்றிற்கு முதலில் வழிவிட்டுத்தான், பிறகு அரசனது வண்டியானாலும் போகவேண்டும்.