உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. நீக்கமற நிறைந்த நீர்! "மனிதனின் உடல் எதனால் செய்யப்பட்டது?' என்ற வினாவிற்கு, ஒரு வரியில் விடையிறுக்க வேண்டுமானால், "அது நீரால் செய்யப்பட்டது!" என்றுதான் சொல்ல வேண்டும் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். அதற்குக் காரணம், உடம்பிலுள்ள நீரின் எடை மட்டும் உடம்பின் மொத்த எடை யில் ஏறத்தாழ முக்கால் அளவு இருக்கும் என்று செப்பு கின்றார்கள். நாம் உட்கொள்ளும் உணவை ஆராய்ந்து பார்த்தால் கூட, அவற்றில் சோற்றின் அளவைவிட நீரின் அளவே மிகவாக இருக்கக் காணலாம். நாம் தின்னும் காய்கறிகளிலும் பழங்களிலும் நீர்தான் ஏராளமாக இருக்கும். தக்காளியில் 100க்கு 94 பங்கும், முட்டைக்கோசில் 100க்கு 93 பங்கும் உருளைக்கிழங்கில் 78 பங்கும், புடலங்காயில் 96 பங்கும், ஆப்பிளிள் 80 பங்கும் தண்ணீர் சேர்ந்திருக்கின்றது. பாலிலும் மீனிலும் முக்கால்பங்கு நீர் நிறைந்திருக்கிறது. ஆடு மாடு ஆகியவற்றின் இறைச்சியில் ஏறத்தாழ 100க்கு 70 பங்கு தண்ணீரேயாகும். கோழி இறைச்சியிலும், கோழி முட்டையி லும் 100க்கு 75 பங்கு நீர் கலந்திருக்கிறது. நெய்யிலும், வெண்ணெயிலும்கூட நீரின் சேர்ப்பு மிகவானதே யாகும். நாம் நமக்குத் தேவையான நீரைப் பெற மழையை எதிர் பார்த்திருக்கிறோம். மழையினைப் பொழியும் முகில்கள் கடலிலிருந்து கிளம்புகின்றன. கடல்நீர் இடத்திற்கு இடம் தன்மையில் வேறுபட்டு நிற்பதால், பல்வேறு கடல்களிலிருந்து கிளம்பும் முகில்கள், இடத்திற்கு இடம் தன்மையில் சிறிது