133 வேறுபட்டனவான மழைகளை ஆங்காங்கு பொழிவிக்கின்றன. கடலோரங்களிலுள்ள நகரங்களில் பெய்யும் மழை அமோனியா சத்தையும், கடலுப்புக்களின் சத்தையும் மிகவாகக் கொண் டிருக்கும். நகரங்களில் நம்மை வந்தடையும் அந்த மழைநீர் மிகவான அழுக்குகள் நிறைந்ததாகவும் இருக்கும். உலகப் பரப்பில் மூன்றில் இரண்டுபகுதி நீரால் நிரப்பப் பெற்றதாகும். பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால், இன்னும் மிகவான பரப்பு நீரால் மூழ்கிக்கிடந்தது. திங்களில் அறவே நீா இல்லை என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆகையால்தான் அங்கு உயிரினம் எதுவும் இல்லை-இருக்கமுடியாது என்று அறிதியிடப்படுகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் நாள் ஒன்றுக்கு 120 அவுன்சு நீர் தேவைப்படுகிறது. அவ்வளவு நீரைக் கட்டாயம் உட்கொண்டால்தான் உடல் நலமாக இருக்க வழி ஏற்படும். நகரங்கள், சிற்றூர்கள், பேரூர்கள் ஆகியவற்றின் வரலாறுகளைத் துருவிப் பார்த்தால், அவையெல்லாம் நீர் நிலைகளை ஒட்டியே வளர்ந்தோங்கி வந்தனவாக இருக்கும். இற்றைக் காலத்தில் வளர்ந்துவரும் பட்டு, பருத்தி, கம்பளி, தோல், சாயம், வண்ணம், கயிறு போன்ற பல்வேறு தொழிற் சாலைகள் அந்தப் பொருளுக்கேற்றபடி உரமும் உறுதியும், வலிவும் பொலிவும் தரக்கூடிய நீர்நிலைகள் உள்ள இடங்களில் தான் நிறுவப்படுகின்றன. பயன் மக்கள் குளிப்பதற்குப் பெரும்பாலும் நீரையே படுத்திவருகின்றனர். என்றாலும், ஒருசில காலங்களில், ஒருசில இடங்களில், ஒருசிலர் பாலையும் தேனையும்கூடப் பயன்படுத்தி வந்தனர்- வருகின்றனர். நீரில் நறுமணம் வீசும் வண்ணமலர்களையும், வண்ணப்பொடிகளையும் தூவி, இன்சுவைகளைக் கலந்து நீராடும் பழக்கம் பண்டைத் தமிழகம் -அரேபியம்- எகுபதியும்-கிரேக்க-உரோமானியம் ஆகிய நாடுகளில் சிறந்து விளங்கிற்று. மிக ஆடம்பரமான முறையில்
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/135
Appearance