134 வெந்நீராடும் பழக்கம் பண்டை உரோமானியத்தில் இருந்து வந்தது. இங்கிலாந்தில் பல பகுதிகள் கடல்மட்டத்திற்குக் கீழே இருப்பதால், தண்ணீருக்காக மிக ஆழமாக வெட்ட வேண்டிய இன்றியமையாமை ஏற்படுவதில்லை. அதற்கு இலண்டன் மாநகரே சிறந்த எடுத்துக்காட்டாகும். இலண்டன் மாநகரில் பெரும்பாலான உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், துணி வெளுக்கும் விடுதிகள் ஆகியவை, தங்கள் தங்கள் இடங்களில் ஓயாமல் நீர் பொழிந்து கொண்டிருக்கும் நீரூற்றுக்களைத் தோண்டி வைத்துக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாக் கண்டங்களிலும் நீருற்றுக்கள் ஏராளம் உண்டு. திராவிடத்தில் தமிழ் மாநிலத்தைச் சேர்ந்த தென்னாற்காடு மாவட்டத்தில் நெய்வேலியைச் சேர்ந்த பகுதி களில் ஏராளமான நீருற்றுக்கள் இருக்கின்றன. குடிநீர்ப் பிரச்சினை இன்னமும் உலகின் பல பகுதிகளில் தீர்க்கமுடியாத பிரச்சினையாகவே இருந்து வருகிறது. பெரு முயற்சிகள் எடுத்து நெடுந்தொலைவிலிருந்து குடிநீர் கொண்டு வந்து சேர்க்கும் பணிகளில் பெரும்பாலான நாடுகள் ஈடுபட் டிருக்கின்றன. கடல்நீரைக் குடிநீராக எளிதில் மாற்றுவதற்கான முயற்சி களில் அறிவியலறிஞர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அத்தகைய முயற்சிகள் எளிதில் வெற்றிபெற்றுவிட்டால், கடற்கரையை ஒட்டியுள்ள பல நகரங்களில் குடிநீர்ப் பிரச்சினை எளிதில் தீர்ந்துவிடும். உயிரினங்கள் நீரின்றி உயிர் வாழா! உலகில் என்று நீரற்றுப்போகுமோ, அன்றே உயிரினமும் அற்றுப்போகும்!
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/136
Appearance