உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. கடவுள் என்பது கற்பனை ! மதக்காரர்களெல்லாம், எதிர் வினாக்களிலிருந்து எளிதாகத் தப்பித்துக்கொள்வதற்காக, 'கடவுள்' என்ன என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டிய இன்றியமையாமை இல்லை என்று சொல்லிவிடுகிறார்கள். நாம் அதனைத் தெரிந்துகொள்ளாமலே வணங்கவேண்டும் என்கிறார்கள். அவருடைய பண்புகளைப்பற்றி ஆராய்வது குறும்புத்தனம் என்றும், அவைகளைப்பற்றி ஆராய்வதற்கு நமக்கு எவ்வித உரிமையுமில்லை என்றும் சொல்லுகிறார்கள். அப்படியே அவரைத் தெரிந்துகொள்ளாமலே வணங்கவேண்டுமென்று வைத்துக்கொண்டாலும், அவர் இருப்பதைப் பற்றியாவது நாம் உறுதியாகத் தெரிந்துகொள்ள வேண்டாமா? மேலும் அவரைப்பற்றிச் சொல்லப்படும் முரண்பாடான பண்புகளெல் லாம், அவரிடம் பொருந்தியிருக்க முடியுமா என்பதை ஆராய்ச்சி செய்வதற்குமுன், அவர் இருப்பதைப்பற்றித் திட்டவட்டமாக எப்படிக் கூறமுடியும்? ஆகவே, உண்மையைக் கூறவேண்டுமானால், கடவுளை வணங்குவது என்பது, தன் மூளையின் கற்பனையை வணங்குவதேயாகும்; அல்லது, வெறும் சூன்யத்தை வணங்குவதாகும். நாத்திகமே சரி பொருளை இன்னும் குழப்பத்தில் விடுவதற்காக, ஆத்திகர் களெல்லாம் கடவுள் என்ன என்பதைப்பற்றித் தாங்கள் ஒன்றும் திட்டவட்டமாகச் சொல்லாமல் இருப்பதே மேல்