136 என்ற முடிவுக்குச் சில பொழுதுகளில் வந்துவிடுகிறார்கள். எதிர்மறைகளாலும் மனக்கற்பனைகளாலும் சொல்லுகின்ற ஒன்றை உண்மையானது என்றும், முழுநிறைவானது என்றும் தாங்களாகவே நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், உண்மையில் இப்பொருள் அவர்களுடைய மனக்கற்பனையே ஒழிய வேறில்லை என்பது நன்கு விளங்கும். ஓர் ஆத்மாவுக்கு உடல் என்பது கிடையாது. எல்லையற்றது என்பது எல்லை யுடையதாக இருக்க முடியாது. முழு நிறைவானது என்று சொல்லப்படுவது, குறைவாய் இருக்கமுடியாது. ஆகவே எண்ணிறந்த குறைகளையுடைய ஒன்றைப் பற்றியாவது, பொருள் சூன்யமாய் இருக்கும் ஒன்றைப்பற்றியாவது. யாராவது ஓர் உண்மையான கருத்தைக் கொண்டிருக்க முடியுமா? எது ஒன்று எண்ணத்தையே கடந்து நிற்கிறதோ, அது சூன்யத்தைத் தவிர வேறெதாவது இருக்க முடியுமா? மிகப்பெரிய கடவுளின் பண்பாடுகளானவை, கேவலம் மனித னுடைய அறிவுக்கு எட்டாதவை என்று சொல்லப்படுமே எல்லையற்றவர் என்று என்று கூறப்படுமே யானால், அவருக்கும் அவருடைய உயிர்களுக்கும் எத்தொடர் பும் இருக்கமுடியாது என்பதை நாம் ஒப்புக்கொண்டு தீரவேண்டும். ஆகவே, கடவுளை எல்லையற்றவர் என்று சொல்லுவதானது, மனிதர்களுக்காக, அவரைக் கொன்றதாக ஆகும். அல்லது குறைந்த அளவு மனிதர்களுக்கு அவரால் எவ்விதப் பலனுமில்லை என்றாவது ஏற்படும். யானால், கடவுள் கடவுள் மனிதனை அறிவுடையவனாகப் படைத்தார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் சகலமும் அறியக்கூடியவ னாகப் படைக்கவில்லையே! அதாவது எல்லாவற்றையும் உணரக்கூடியவனாகப் படைக்கவில்லையே. இதிலிருந்து ஏற்படுகிறது என்னவென்றால், கடவுள் தத்துவத்தை உணர்ந்துகொள்ள வேண்டிய அறிவோடு மனிதனைப் படைப்ப தற்குக் கடவுளால் முடியவில்லை என்பதேயாகும். எனவே, மனிதன் கடவுளை அறியும்படியாகச் செய்யும் சக்தியும் அவரிட மில்லை; அறியவேண்டும் என்ற விருப்பமும் இல்லை என்பது
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/138
Appearance