உறுதியாகிறது. கொள்ளமுடியாத 137 மனிதனுடைய தத்துவத்தை உணர்ந்து இயற்கையோடு அமைந்திருக்கும்போது மனிதர்களிடத்தில் கோபித்துக்கொள்வதற்குக் கடவுளுக்கு என்ன நியாயம் இருக்கிறது? இயற்கையாகவே மனிதன் கடவுள் தற்துவத்தை உணரமுடியாமலிருக்கும்போது, அதற்காக நாத்திகர்களைக் கடவுள் தண்டிப்பதாயிருந்தால், அவர் அநீதியானவராகவும், மிகக் கொடுங்கோலராகவும் இருக்க வேண்டும்! நாத்திகம் குற்றமல்ல ! = பெரும்பாலான பாமரமக்களுக்குப் பயம் என்பதைவிட முடிவான தர்க்கங்கள் எதுவுமே கிடையாது. இந்தக் காரணத்தால், மதக்காரர்கள் எல்லாரும் நம்மை ஜாக்கிரதை யான வழியிலேயே போகவேண்டுமென்று சொல்லுகிறார்கள். நம்பாமலிருப்பதைவிடக் கொடுமையான காரியம் எதுவுமே இல்லை என்கிறார்கள். கடவுளிருப்பதைப்பற்றிச் சந்தேகப்படு கிறவர்களையெல்லாம் கொஞ்சங்கூட இரக்கமில்லாமல் அவர் தண்டிப்பார் என்று சொல்லுகிறார்கள். அவர் அப்படிக் கொடூரமாய் நடத்துவது நியாயமென்கிறார்கள். நாத்திகர் களைப் பழிக்குப்பழி வாங்கும் ஒரு கோபமான அரசனுடைய செய்கையைப் பற்றிக் கேட்பதென்பது பைத்தியக்காரத்தனமே யாகுமென்று சொல்லுகின்றார்கள். இக்கூற்றுக்களைப் பொறுமையாக ஆராய்ந்து பார்ப்போமானால், எது உறுதிப் படுத்தவேண்டுமோ அதே கற்பித்துக் கொள்ளப்பட்டிருக்கிற தென்பது தெளிவாகும். கடவுளை நம்புவதுதான் நல்லது. சந்தேகித்தாலோ அல்லது மறுத்தாலோ ஆபத்துண்டாகு மென்று நம்மிடம் சொல்வதற்குமுன், முதலாவதாக அவ்விதம் சொல்பவர்கள் நாம் திருப்திப் படும்வகையில் கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தவேண்டியது அவசியமாகும். பிறகு, மனிதன் தன்னுடைய கூரிய அறிவினாற் கூட அறிந்துகொள்ள முடியாமலிருக்கும் ஒரு பைத்தியமான நிலைமையிலிருப்பதற்காக அவனைக் கடவுள் தண்டிப்பது அ.-9
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/139
Appearance