12 வளர்த்த அழகுக் கலைகளுமேயாகும் என்பது வெள்ளிடை மலை. ஈடும் எடுப்புமற்ற அழகுக் கலைகள் பலவற்றையும் உருவாக்கும் அளவுக்குத் தமிழ்மொழிக்கு அமைந்த சிறப் பியல்புகள்தாம் யாவை? எனின் கூறுதும்: 1. தமிழ் மொழி இயற்கையோடு இயைந்து நின்று இயற்கையாகவே தோன்றிய மொழியாகும்! 2. இயற்கையழகும், செயற்கைப் பொலிவும் ஒருங்கே கொண்ட மொழி - தமிழ்! - 3. தோற்றக் காலத்தைக் கணக்கிடமுடியாத அளவுக்குத் தொன்மை வாய்ந்த மொழி - தமிழ்! 4. பழைமைக்குப் பழைமையாய்ப் புதுமைக்கும் புதுமையாய் விளங்கும் பொற்புள்ள மொழி - தமிழ்! 5. காலங்கள் பலப்பல கடந்தும் காலமாகாத மொழி - தமிழ்! 6. மூத்தமொழி எனினும் முதுமைக்கோலம் பூணாமல், கன்னிக்கோலம் பூண்ட மொழி - தமிழ்! 7. இனிமையான மொழி; எளிமையான மொழி, வளமையான மொழி - தமிழ்! 8. தொண்டைக்கு அப்பால் போகாமல்,இப்பாலேயே பிறக்கும் வல்லோசை, இடையோசை, மெல்லோசை ஆகிய வற்றைக் கொண்ட மொழி - தமிழ்! . 9. எழுத்தோசைகளைக் கூட்டினாலே சொல்லோசை பிறக்கும் என்ற சிறப்புத் தன்மையைக் கொண்ட மொழி தமிழ்! 10. ஐந்து எழுத்துக்களுக்குள்ளாகவே பெரும்பாலான சொற்களையும் உருவாக்கும் திறன் படைத்த மொழி- தமிழ்!
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/14
Appearance