உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 யாயந்தான் என்பதை உறுதிப்படுத்தவேண்டும். அதாவது, சுருங்கக் கூறவேண்டுமானால், நியாயமே உருவக மாக இருப்பதாகச் சொல்லப்படும் ஒரு கடவுள், கடவுள் தத்துவமென்பதை அறியவே முடியாத நிலையிலிருக்கும் மனிதனைக் கொடுமையாகக் தண்டிப்பதின் நியாயத்தை உறுதிப்படுத்த வேண்டும். என்னே மதக்காரர்களின் தர்க்கம்! அவர்களே சில கட்டுக்கதைகளைக் கட்டிவிடுகிறார்கள்; பிறகு முன்னுக்குப்பின் முரணாகக் காரியங்களை அவைகளோடு பிணைத்துவிடுகிறார்கள்! பிறகு, தாங்களே கட்டிய புரட்டுக் களை நம்பாமலிருக்கக்கூடாது என்று பயமுறுத்துகிறார்கள். இந்த முறைப்படி நடப்பதாயிருந்தால், எந்த அபத்தமான ஆபாசத்தையும் நம்பித்தானாக வேண்டும் என்பது ஏற்படும். உலகிலுள்ள எல்லாக் குழந்தைகளும் நாத்திகர்களே யாவார்கள். ஒன்றுமே தெரியாது. ஆகவே, இதற்காக அவர் களைக் கெட்டவர்களென்றோ, பாலிகளென்றோ சொல்ல முடியுமா? அவர்கள் எந்த வயதில் கடவுளை நம்புவதற்கு ஆரம்பிக்கிறார்கள்? 'பகுத்தறிவு வந்தவுடன்' என்று நீங்கள் சொல்லுவீர்கள். இப்பகுத்தறிவுக்காலம் எப்போது ஆரம்பிக் கிறது? அறிய முடியாததென்று சொல்லப்படும் கடவுள் தத்துவத்தை ஆராய்வதில் மிக மேதாவிகளான மதக்காரர்கள் கூடத் தவித்துக்கொண்டிருக்கும்போது, பெண்கள் தொழிலாளர்கள் முதலிய ஜனத்தொகையின் பெரும்பாலான பாமர மக்கள் என்போர், அதைப்பற்றி என்ன கொள்ளமுடியும்? கடவுள் நம்பிக்கை தொட்டிற் பழக்கமே! தெரிந்து கடவுளைப் பற்றி யாருக்கு ஒன்றுமே தெரியாதோ அவர் களுடைய வார்த்தையைக் கேட்டுத்தான் பிறகு கடவுளை நம்புவதற்கு ஆரம்பிக்கிறார்கள். நமது வளர்ப்புத் தாய்கள் தான் நமது கடவுள் உபாத்தியாயர்கள். மனிதர்கள், ஓநாய், பிசாசு முதலியவைகளைப் பற்றிக் குழந்தைகளிடம் சொல்லு கிறார்கள். பச்சிளம் பிராயத்திலிருந்தே இயந்திரம் மாதிரி இரண்டு கைகளையும் தாங்களாகவே சேர்க்கும்படி சொல்லிக்