உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 கொடுக்கிறார்கள். அப்படிச் சொல்லிக்கொடுக்கும் வளர்ப்புத் தாய்களுக்குத் தெரிந்ததைவிடச் சிறிதாவது பிறருக்கு விபர மாய்த் தெரியுமா? கடவுள் என்பது ஒரு பரம்பரை வழக்கம் • ஒரு குடும்பத்தின் சொத்தும், அதன் பொறுப்பும், எப்படி ஒரு தகப்பனால் தன்னுடைய சந்ததியார்களுக்குக் கொடுக்கப் படுகிறதோ, அதைப்போலவேதான் மதம் என்பது கொடுக்கப் படுகிறது. கடவுள் என்பதை ஒருவர் மற்றொருவருக்குச் சொல்லிக்கொடுக்காமலிருந்தால் உலகிலுள்ள பெரும்பாலான மக்களுக்குக் கடவுள் என்றால் என்ன என்பதே தெரியாது ஒவ்வொருவனும் தனது முன்னோர்களிடமிருந்து எந்தக் கடவுள் என்பதைபற்றித் தெரிந்துகொண்டானோ அதையே தான் தனது சந்ததியார்களுக்கும் சொல்லுகிறான். ஆனால், அவனுடைய விருப்பத்திற்குத் தக்கபடி ஒவ்வொருவனும் அந்தக் கடவுளைத் திருத்தியும், புதுப்பித்தும், அழகுபடுத்தி யும் சொல்கிறான். அதன் ஆரம்பக் காலம் மனிதனுடைய மூளையானது முக்கியமாக இளம் பிராயத் தில், ஒரு மிருதுவான மெழுகைப்போல் எந்தவழியிலும் திருப்பக்கூடியதாக இருக்கிறது. தானே யோசிக்கும் தன்மை வரக்கூடாத பருவத்தில், மனிதனுடைய எண்ணங்களை யெல்லாம் உண்டுபண்ணுவது அவனுடைய கல்வியேயாகும். இதை யுணராமல் சிறிய வயதில் சரியாகவோ, தவறாகவோ நமது மண்டைக்குள் புகுத்தப்பட்ட எண்ணங்களெல்லாம். நமது பிறப்பிலேயே இயற்கையாக ஏற்படும் உணர்ச்சி களென்று தவறாக நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். இந்த மனப்பான்மைதான் நமது பிரச்சினைகளுக்கெல்லாம் அடிப் படையாக இருக்கிறது. அது பரவும் விதம் யார் நமக்கு போதிக்கிறார்களோ, அவர்களுடைய எண்ணங்கள் நமக்குள் புகுத்தப்படுகின்றன. நம்மைவிட