உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 அவர்களை அதிகப் புத்திசாலிகள் என்றே நாம் நம்புகிறோம். நமக்குக் கற்பிக்கப்படுபவைகளை அவர்கள் பூரணமாய் அறிந்து கொண்டுவிட்டதாகவே நாம் நினைத்துக் கொள் கிறோம். நமக்கு நாமே உதவி செய்துகொள்ள முடியாத பக்குவத்தில், அவர்கள் நம்மைப்பற்றிக் கவலையெடுத்து வந்ததனால், பிறகு ஏமாற்றமாட்டர்கள் என்றே தீர்மானிக் கிறோம். இந்த எண்ணத்தினால்தான், ஆதரவில்லாத ஆயிரக்கணக்கான தவறுகளைக் கண்மூடித்தனமாகக் கையாள ஆரம்பிக்கின்றோம். அவர்கள் சொல்வதைப்பற்றி ஆராயக் கூடாதென்று அவர்கள் சொல்லியிருந்துங்கூட, அவர்கள்மீது நமக்கு நம்பிக்கை குறைவதில்லை. ஆனால், அதற்கு மாறாக அவர்களுடைய எண்ணங்களுக்கு நாம் மரியாதை கிறோம். பகுத்தறியமுடியாக் காலத்தில் கற்பிக்கப்பட்டவை செய் மனித சமூகமானது சரி எது, தவறு எது என்றும், வலதுகை எது, இடதுகை எது என்றும் தெரிந்துகொள்ள முடியாத ஒரு பிராயத்திலேயே, மதக்கொள்கைகளைப் பற்றிச் சொல்லிக் கொடுப்பதில் போதனைக்காரர்கள் மிக உன்னிப்பாக இருக்கிறார்கள். நாற்பது வயதான ஒரு மனிதனுடைய குணாதிசயங்களைத் திருத்துவதென்பது எவ்வளவு கடினமான காரியமோ, அவ்வளவு கடினந்தான் நாற்பது வயதான மனிதன் தனது சிறுபிராயத்திலிருந்தே கடவுளைப்பற்றி நினைத்துக்கொண்டிருக்கும் எண்ணங்களை மாற்றுவதிலும் இருக்கிறது. இயற்கைக்கும் கடவுளுக்கும் சம்பந்தமில்லை கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார் என்பதற்கும், அந்த உண்மையை நிரூபிப்பதற்கும், இயற்கை விநோதங்களே அத்தாட்சியாகும் என்று சொல்கிறார்கள். ஆனால், இயற்கைபற்றி நினைக்கவும், அதனுடைய வளர்ச்சியைப் பற்றி ஆலோசிக்கவும், இவ்வுலகில் எத்தனைபேருக்கு அவகாச மும், சாமர்த்தியமும், போதிய பிரியமும் இருக்கிறது என்று