141 ஒரு கேட்கிறேன்? உலகத்திலுள்ள பெரும்பாலான மக்களுக்கு இவ்வியற்கையைப் பற்றிக் கவலையே கிடையாது. ஒரு குடியானவன் தான் தினந்தோறும் பார்த்துக்கொண்டிருக்கும் சூரியனின் அழகைப் பார்த்து மனங் கசிவதில்லை. கப்பலோட்டியானவன் சமுத்திர அலைகளின் அசைவுகளைப் பார்த்து ஆச்சரியப்படுவதில்லை. அவனுக்கு அதிலிருந்து மதசம்பந்தமான தத்துவார்த்தங்கள் தோன்றுவ தில்லை. இயற்கையின் அதிசயங்களுக்குக் காரணம் கூற முடியாத ஏதோ சிலருக்குமாத்திரம் கடவுளின் சக்தி இயற்கை வழியாக அறியக்கூடியதாகத் தோன்றலாமே ஒழிய, இயற்கை யின் அதிசயத்தைக்கொண்டு கடவுளிருப்பதாக நிரூபித்துவிட முடியாது. நிதானமான மனப்பான்மையை உடைய ஒரு தத்துவஞானிக்கும், இயற்கையின் அதிசயங்கள் ஒரு நிரந்தர மான சட்டங்களுக்குட்பட்டது என்று தோன்றுமேயொழிய, வேறு எவ்விதத் தத்துவமும் தோன்றாது. இயற்கை என்பது பலவேறான பொருள்கள் பலவிதங்களில் ஒன்று சேர்வதின் பயனேயாகும் என்ற உண்மை அவனுக்குப் புலப்படும். இயற்கை அதிசயங்களுக்குக் காரணம் உண்டு இயற்கை அதிசயங்களிலிருந்து மனிதன் கற்றுக்கொள்ள வேண்டியவை பலப்பலவும், அவைகளைத் தனது சுகவாழ் விற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியங்களும் இருக்க, அவைகளுக்குக் காரணமான ஒன்று, அறிய முடியாத ஒன்று, கற்பனையான ஒன்று இருப்பதாக நினைத்துக் கொள்வது எவ்வளவு பொருத்தமற்ற வாதம் என்பதைப் பாருங்கள். நம்மால் அறியக்கூடிய ஒன்றுக்கு, நம்மால் அறியவே முடியாத ஒன்று கர்த்தா என்று சொல்வதானது எவ்வளவு அபத்தமானது என்பதை யோசித்துப் பாருங்கள். கடவுள் என்றால் என்ன? ஆவி அல்லது ஆத்மா என்றால் என்ன? நம்மால் ஒன்றுமே புரிந்து கொள்ளமுடியாத நிலைமை யைச் சொல்லக்கூடிய வார்த்தைகளாகும். ரிஷிகளும், குருமார் களும், இயற்கையை அதன் காரண காரியங்களையும் பற்றிச்
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/143
Appearance