உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 சிந்தனை செய்யவேண்டும். அப்படிச் செய்தால் அதன் உண்மையை உணர்வார்கள். அவ்வாறு செய்யாமல் அலைவ தால் அவர்களுடைய அறிவு விசாலப்படுவதற்கு மாறாக, அவர்களை அவர்களே அறிந்துகொள்ள முடியாமல், அவர் களுடைய மூளைகளைச் சிக்கலில் கொண்டுபோய்ப் புகுத்தி இடர்ப்பட்டு விடுகிறார்கள். . கடவுள் என்ற ஒன்று இல்லாமல் இயற்கைக்குக் காரணம் கூறமுடியாது என்கிறார்கள். அதாவது அவர்களுக்கு எதைப் பற்றி மிகச் சொற்பமாகத் தெரியுமோ அந்த ஒன்றை (கடவுளை)க் காரணமாகக் காட்டுகிறார்கள். எது ஒன்று விளங்காததாக இருக்கிறதோ அதை இன்னும் விளங்காத ஒன்றைக்கொண்டு விளக்கிவிடுவதாகப் பொய் நடிப்புச் செய் கிறார்கள். ஒரு முடிச்சின்மேல் இன்னும் பல முடிச்சுகள் போட்டு அவிழ்த்துவிட்டதாகக் கருதிக்கொண்டிருக்கிறார் கள். மிகத்தீவிரமான தத்துவஞானிகளே! கடவுளிருப்பதாக நிரூபிக்க வேண்டுமானால் தாவர நூலிலுள்ள விஷயங்களைக் காப்பியடியுங்கள். மனித உடம்பிலுள்ள ஒவ்வொரு அணுவைப் பற்றியும் சோதனை செய்து அறிந்து கொள்ளுங்கள். ஆகாயத்தில் பறந்துபோய் நட்சத்திரங்களின் சுழல்களைக் கணக்கெடுங்கள். பிறகு, கீழே பூமிக்கு வந்து தண்ணீர் ஓடும் முறைகளைக் கவனித்து அறியுங்கள். அதன் பிறகு வண்ணாத்திப் பூச்சிகள், புழுக்கள், நீர் ஜந்துக்கள், அணுக்கள் முதலிய எல்லாவற்றிலும் உங்களுடைய கடவுளரின் பெருமை தெரிவதைப்பற்றி தெளிவுரை எடுத்துக் காட்டலாம். இவை களெல்லாம் ஏன் உங்கள் கடவுள் இருப்பதை உறுதிப்படுத்தி விட முடியாது? ஆனால் இவை எதை உறுதிப்படுத்தும் பல விதங்களாகச் சேரும் முறை, அதன் காரணமான காரியங் கள் முதலியவைகளைப் பற்றி உங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்பதைதான் உறுதிப்படுத்தும். இன்னும் இயற்கையை நீ அலட்சியப்படுத்திவிட்டாய் என்பதும் விளங்கும். தொலை நோக்கும் கண்ணாடிக்குக்கூடப் புலப்படாத பல அணுக்களும் ஜந்துக்களும் இருக்கின்றன என்ற ஒரு செய்தியே உனக்குத்