உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 தெரியாது என்பது, தானாய் தொட்டுப் பார்க்கக்கூடியதும், விளங்கும். கடைசியாகத் உணரக்கூடியதுமான பல வற்றை உனது அறிவானது உணர்ந்துகொள்ள முடியாம லிருக்க, தெரியாத ஒரு உலகத்தில் உன் அறிவுக்கு எக்காலும் புலனாகாத ஒன்று தலைவனாக இருப்பதாக நீ சொல்லிக் கொள்வதானது, உனக்குச் சுலபமாக இருக்கிறது என்கிற குட்டு இதனால் வெளிப்படுகிறது. உலகம் ஒருவராலும் படைக்கப்பட வில்லை காரணமில்லாமல் காரியமுண்டாகாது' என்று மதக் காரர்கள் எல்லோரும் வெகு சிரத்தையோடு கூறுகிறார்கள். உலகம் தானாகவே உண்டாகவில்லை என்று அடிக்கடி சொல்லுகிறார்கள். ஆனால், நான் சொல்வதென்னவெனில் உலகம் என்பது காரணமே ஒழியக் காரியமல்ல. இது ஒருவ ராலும் செய்யப்படவில்லை. ஏனெனில், இதைச் செய்ய எவராலும் முடியாது. உலகம் எப்போதுமே இருந்துகொண்டு தானிருக்கிறது. அது இருக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்குக் காரணம் அதுவேதான். இயற்கையானது நம் கண்ணெதிரில் எப்பொழுதும் அசைந்துகொண்டும் உற்பத்தி யாகிக் கொண்டும் இருப்பதே அதன் தத்துவமாகும். ஆகையால் அதை நடத்துவதற்குக் கண்ணுக்குத் தெரியாந ஒரு சக்தி வேண்டிய அவசியமே யில்லை. உயிரற்ற பொரு களானது தன்னுடைய சக்தியைக் கொண்டும் வேறுபாட்டின் காரணத்தினாலும் அசைகிறது. அதனுடைய பலவிதமான அசைவுகளுக்குக் காரணம், அதனிடமிருக்கும் பலவிதமான சத்துக்களே யாகும். ஒவ்வொரு ஜீவனைப்பற்றியும் நமக்கிருக் கும் வேறுபட்ட உணர்ச்சியாலும், அதனுடைய வேறுபாடான அசைவுகளாலுமே, நாம் ஒரு உயிருக்கும், மற்றொன்றுக்கும் இருக்கும் வேறுபாட்டை உணர்கிறோம். (இது ஜீன் மொனியார் என்பவர் எழுதிய கட்டுரையைத் தழுவியது. அவர் கத்தோலிக்கப் பாதிரியாராக இருந்து பிறகு நாத்திகரானவர்.)