20. வேதமார்க்கம் பற்றிப் புத்தர் ஒரு சமயம் இரண்டு பிராமண வேதாந்திகள் தங்களுக் குள் பலமாகச் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். சண்டை யென்றால் வாய்ச்சண்டைதான். ஒருவரின் பெயர் வாசித்தன்; மற்றவரின் பெயர் பாரத்வாசன். இருவருக்குள் ஏற்பட்ட சண்டை, பிரமாவை அடையக்கூடிய வழி என்ன என்பதுபற்றி யாகும்.பௌசுகாரசாதி' என்ற வேத சுலோகத்தை ஒப்பித்து, அதிலுள்ள வழியே பிரமாவை அடையச் செய்யும் என்று வாசித்தர் வாதிட்டார். பாரத்வாசன், 'தாருக்சியம்' என்ற வேத சுலோகத்தை ஒப்பித்து, அதிலுள்ள வழிதான் பிரமாவை அடையச் செய்யும் என்று பேசினார். இவர்கள் மேற்கோள் காட்டிய இரு சுலோகங்களும் பிரமா ஒருவரால் அருளப்பட்ட தாக நம்பிக்கை. இருந்தாலும், பிரமாவை அடைய இரண்டு வழிகள் கூறப்பட்டிருக்கின்றன. அவற்றில் எது சிறந்தது என்பதில் தர்க்கம். இந்தப் பிராமண வேதாந்திகள் பலமாக வாதிட்டுக்கொண் டிருக்கும்பொழுது, புத்தர் அந்தப்பக்கம் வந்தார். இருவரின் பேச்சுக்களைக் கேட்டபடி இருந்தார். மூன்றாவதாக ஒருவர் இருக்கிறாரென்பது தெரிந்ததும், சண்டையிட்டுக்கொண் டிருந்த இருவரும் இவரிடம் வந்தார்கள். புத்தர் நடு நிலைமையாளராக இருந்தார். வாசித்தன் தனக்குச் சாதக மாக வேத சுலோகங்களை ஒப்பித்தான். பாரத்வாசன் தனக்குத் தெரிந்த சுலோகங்களை மேற்கோள் காட்டினான். "இந்த ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குப் போகப் பல பாதைகள் இருக்கின்றன. அவற்றில் எது சிறந்தது, குறுகியது
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/146
Appearance