உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 - என்பது தெரிந்தால் அதன்படி போகலாம். அதைப்போல, இந்த உலகத்திலிருக்கும் ஆத்மா, பிரமாவை - பிரம்மத்தை அடையப் பல வழிகள் வேதங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றில் எந்த வழி சிறந்தது என்பதுபற்றி எங்களுக்குள் விவாதம்" என்று இருவரும் சொன்னார்கள். "எது சிறந்த வழி என்பதற்குமுன், தாங்கள் சொல்லு கிறபடி உண்மையாகவே பிரம்மத்தை அடையப் பல்வழிகள் இருப்பது உண்மை; வேதங்கள் சொல்லுகின்றன; அதைப் பற்றி விவாதமில்லை" என்றும் பிராமண வேதாந்திகள் சொன்னார்கள். பிராமண சிரேஷ்டர்களே! இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள். அடையவேண்டும் என்று வெகுவாகச் சொல்லுகிறீர்களே. அந்தப் பிரமாவை வேதத்தைப் படித் துணர்ந்த பிராமணர்களில் யாராவது நேருக்குநேர் பார்த் திருக்கிறார்களா?" என்று புத்தர் கேட்டார். பிராமணர்கள் திடுக்கிட்டார்கள். ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அடிப்படைக்கே ஆபத்தான கேள்வியையல்லவா இவர் கேட்கிறார். இருந்தாலும், கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லியாகவேண்டுமே. "இல்லை; வேதம் படித்தவர்கள் யாரும் பார்த்ததில்லை" என்று வாசித்தன் சொன்னான். "வேதம் படித்தவர்கள் போகட்டும், வேதங்களைச் சொல்லிக் கொடுக்கும் பிராமண ஆச்சாரிய சீலர்கள், அவர் களாவது பிரமாவை நேரில் பார்த்திருக்கிறார்களா?" இவரை ஏன் நடுநிலைமையாளராக ஆக்கினோம் என்று அவர்களுக்கு ஆகிவிட்டது. 'இல்லை!" என்று பாரத்வாசன் மங்கிய குரலில் சொன்னான். புத்தர் விடவில்லை. மேலும் கேட்டார்: "அவர்கள் போகட்டும், வேதங்களைச் செய்ததாகச் சொல்லப்படும்