உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 முனிவர்களாவது பிரமாவை நேருக்குநேர் பார்திருப்பார் களென்று சொல்ல முடியுமா? "அப்படியும் சொல்ல முடியாது?" புத்தர் பின்வரும் சிறு சம்பவத்தைச் சொன்னார். "நான்கு நெருக்கள் கூடும் சந்தியில், ஒருவன் மாடிப் படிக்கட்டுகளை அமைத்துக் கொண்டிருந்தான். வேறு அமைப்புகள் எதுவுமில்லாமல், மாடிப்படிக்கட்டுக்கள் மாத்திரம் உயருவதைக்கண்ட மக்கள், ஆச்சரியத்துடன் அவனைக் கேட்டார்கள்,"இந்தப் படிக்கட்டுகளை எதற்காக அமைக்கிறாய்? என்று. "மாளிகையின் முதல்மாடிக்குப் போக!" "மாளிகையா? அது எங்கிருக்கிறது? கிழக்கிலா, மேற்கிலா, வடக்கிலா, தெற்கிலா? மாளிகை எவ்வளவு பெரியது, எவ்வளவு உயரமானது, பார்க்க எப்படியிருக்கும்?" மாடிப்படி கட்டிக் கொண்டிருப்பவன், "எனக்குத் தெரியாது!" என்றான். "மாளிகை ஒன்றுமில்லாமல், எதுவென்று தெரியாமல், படிக்கட்டுகளை மட்டும் நீ கட்டிக் கொண்டிருக்கிறாயா?" ஆமாம்! அவனைப்பார்த்து மக்கள் சிரித்தார்கள். புத்தர் தனது கதையை நிறுத்தினார். தாங்கள் கொண்டு வந்த வாதங்களை மறந்து வாசித்தனும், பாரத்வாசனும் கதை கேட்டுக்கொண்டிருந்தார்கள். வாசித்தன் சிரித்தான். "மாளிகை எதுவும் இல்லாமல், மாடிப்படிக்கட்டுக்கள் கட்டுபவனைப் பார்த்து, எல்லோரும் சிரிக்கத்தான் செய்வார்கள்" என்றான். "அவனைப் போன்ற பைத்தியக்காரர்கள் இருந்திருக்க மாட்டார்கள்." பாரத் வாசன் அவனையொட்டிப் பேசினான்.