உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 புத்தர், அவர்களின் சிரிப்பை அடக்கி, பிரம்மத்தை, பிரமாவை அடைய வேண்டும் என்று கூறிக்கொள்ளும் வேதாந்திகள், மாளிகை இல்லாமல் படிக்கட்டமைப்பவனின் நிலையில்தான் இருக்கிறார்கள். பிரமாவைப் பார்த்ததில்லை; பிரமாவைத் தெரியாது. இருந்தாலும், பிரமாவை அடையும் வழிகளைப்பற்றி நிச்சயமாகச் சொல்லுகிறார்கள். பிரமாவைப் பார்க்காதவர்கள், தெரியாதவர்கள், பெயர் மட்டும் கேட்டவர்கள், மற்றவர்களைப் பிரமாவிடம் அழைத்துப்போவதாக முன்வந்து நிற்கிறார்கள். குருடர்கள் ஒன்றுகூடி வழிநடப்பது போலிருக்கிறது. முதலில் நடந்து செல்பவனுக்கும் வழி தெரியாது; கடைசியில் நடந்து செல்பனுக்கும் வழி தெரியாது. வேதப்பிராமணர்களின் பேச்சு குருடனின் பேச்சைப் போன்றிருக்கிறது. அது அர்த்தமற்றது, பயனற்றது. வெறும் போலிச்சொற்களின் தொகுப்பு!" புத்தரின் பேச்சுக்குப் பதில் சொல்ல முடியாமல், இரண்டு பிராமண வேதாந்திகளும் தவித்தனர். ஆனால்,உண்மைக்கு முன், அறிவுக்கு முன் அடங்கியிருக்க வேண்டியிருந்தது.