13 11. பன்னிரண்டு உயிரெழுத்துக்கள் தனித்து நின்றும், பதினெட்டு மெய்யெழுத்துகளோடு இரண்டறக் சுலந்து நின்றும், மெய்யெழுத்துக்களை அணைத்துக்கொண்டும், சொற்களைத் தேவைக்கு ஏற்றபடி உருவாக்கும் அரும் மொழி - தமிழ்! 12. சிறப்பு 'ழ' கரத்தையும், சிறப்பு 'ற'கரத்தையும், சிறப்பு 'ன'கரத்தையும் தனக்கேயுரிய எழுத்துக்களாகக் கொண்ட மொழி - தமிழ்! 13. உலக மொழிகள் பலவும் 'ந', 'ம' என்ற இரண்டு எழுத்துக்களை மட்டுமே மூக்கின் துணையோடு பிறக்கும் மெல்லோசைகளாகக் கொண்டிருக்க, வடமொழி 'ங' 'ஞ', ன', 'ந', 'ம', என்ற ஐந்து மெல்லோசை எழுத்துக்களை மட்டுமே கொண்டிருக்க, 'ங', 'ஞ', 'ண', 'ந', 'ம', 'ன' என்று ஆறு மூக்கின் வழி மெல்லோசை எழுத்துகளைக் கொண்ட சிறப்பான மொழி - தமிழ்! . 14.தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு,கோண்ட், கூ, ஓராவன் போன்ற பல மொழிகளைப் பெற்றெடுத்த பிறகும், சீரிளமை குன்றாமல் இருக்கும் கன்னிமொழி - தமிழ்! 15. வரிவடிவில் எழுத்துக்கள் ஒன்றோடொன்று பிணை யாமல், தனித்தனியாக நின்று சொற்களை சொற்களை உணர்த்தும் பாங்குடைய மொழி - தமிழ்! 16. இல்லாத புதிய ஓசையைப் பெறுவதற்கு, ஆங்காங்குப் பயன்படுத்திக் கொள்வதற்கு, ஆயுத எழுத்து என்ற பெயரில் 'ஃ'ஐ உடைய மொழி தமிழ்! - 17. 'குற்றியலுகரம்' என்னும் தனிச்சிறப்பைக் கொண்ட மொழி - தமிழ்! 18. உயிர் இடைச்சொல் - மெய் உடன்படுமெய் - குறில்நெடில்- உரிச்சொல் சாரியை உயிரீற்றுப்
பக்கம்:சிந்தனை மலர்கள் 1982.pdf/15
Appearance